Tamil Cinema News | சினிமா செய்திகள்
இனி கொஞ்ச காலத்துக்கு சாவித்திரியாவே கீர்த்தி இருப்பாள் -நெகிழும் பிரபல நடிகை
நடிகையர் திலகமாக நடித்து இருக்கும் கீர்த்தி, ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க மாட்டார். அது வெறும் வதந்தியே என அவரது அம்மா மேனகா தெரிவித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் வெற்றி கொடி நாட்டிய சாவித்ரியின் வாழ்க்கை ஏற்றம் இருந்த அதே அளவு இறக்கத்தையும் கொண்டு இருந்தது. இவரின் வாழ்க்கையை இயக்குனர் நாக் அஸ்வின் படமாக எடுத்து இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி இருக்கும் இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. சாவித்ரியின் வேடத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் ஏற்று இருந்தார்.
சமூக வலைத்தளத்தில் பல ட்ரோல்களை சந்தித்த கீர்த்திக்கு இந்த வாய்ப்பு மேலும் சிக்கல்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரல் ஹிட் அடித்தது. கீர்த்திக்கு பதில் சாவித்ரியே நடித்து இருக்கிறாரோ என்ற யோசிக்கும் அளவுக்கு அச்சு அசலாக நடிகையர் திலகத்தை முன்னிறுத்தினார். இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டு அவருக்கு கிடைத்தது.
இந்நிலையில், தனது மகள் கீர்த்தியின் சாவித்ரி குறித்து அவரது தாய் மேனகா சுரேஷ் மனம் திறந்து இருக்கிறார். அவர் பேசுகையில், கீர்த்தியிடம் படத்தின் ஷூட்டிங் படங்கள் காட்ட கேட்டேன். ஆனால், அவள் அதெல்லாம் இப்போது வேண்டாம். படம் வெளியான பிறகு பாருங்கள் என மறுத்து விட்டாள். என் நீண்ட நாள் தோழியான விஜய சாமுண்டீஸ்வரி. சாவித்ரியின் மகள். நடிகையர் திலகம் படப்பிடிப்புக்கு முன்னர் அவர்கள் சாவித்திரி அம்மா குறித்த பல விஷயங்களை கீர்த்தி கேட்டுத் தெரிந்துக்கிட்டாள். இப்படி தொடங்கிய படப்பிடிப்பு பல சுவாரசியங்களை கடந்து சென்றது.
இதை தொடர்ந்து, கடந்த 8ந் தேதி ஹைதராபாத்தில் மகாநடி படத்தை பார்த்தேன். படம் பார்க்க தொடங்கும் போது கீர்த்தி அம்மாவாக தான் இருந்தேன். ஆனால், படம் முடிந்து அவள் நடிப்பால் சொக்கி போனேன்.. ஒரு நடிகையாக அவளை கட்டிப்பிடித்து கொண்டு அழுதேன். ஏன்? கீர்த்தியின் அப்பா எதற்கும் கலங்காதவர். அவரே இப்படத்தை பார்த்து மகளின் நடிப்பால் மெய் மறந்து அழுதே விட்டார்.
பிரபு, லட்சுமி, சாரதா, விஜயகுமாரி, வாணிஶ்ரீ உள்ளிட்ட சீனியர் நடிகைகளும் கீர்த்தியை பாராட்டினர். கண்டிப்பாக இப்படத்திற்காக கீர்த்தி தேசிய விருது வாங்குவாள் என அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர். அதைப்போல, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் கீர்த்தி நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அது வதந்தி தான். இன்னும் சில காலத்திற்கு அவள் சாவித்ரியாகவே வாழ ஆசைப்படுகிறாள் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
