கேதார் ஜாதவ்

இவரை பொறுத்தவரை பல வருடங்களாக மகாராஷ்டிரா அணியின் பக்க பலமாக இருந்தவர். தற்பொழுது 32 வயதாகிறது. மத்திய வரிசையில் பேட்டிங், ஆப் ஸ்பின் வீசுவது மட்டுமல்லாது விக்கெட் கீப்பிங் செய்யும் திறமையும் உடையவர். உள்ளூர் போட்டிகளில் நன்கு விளையாடியதால் சர்வதேச அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்திய அணியிலும் தன் பேட்டிங்கில் கலக்கினார். தோனி இவரை நன்கு பயன்படுத்தியதால் பந்துவீச்சில் ஜொலித்தார். ஒரு நாள் போட்டிகளில் தனக்கென்று ஒரு இடம் பிடித்துவிட்டார்.

அதிகம் படித்தவை:  கிரிக்கெட் விளையாடிய WWE சூப்பர்ஸ்டார் ஜான் சேனா. வீடியோ உள்ளே !!
kedhar jadhav

ஐபில்

இது வரை இவர் டெல்லி, கொச்சி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு விளையாடியுள்ளார். இம்முறை சென்னை அணி இவரை ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னை ஐபில் அணிக்கு இவர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் .

kedar_jadhav__dhoni

அதில்” சென்னை அணியில் விளையாட வாய்ப்பு என்றால், நான் எதுவும் செய்ய தயங்கமாட்டேன். தோனியின் தலைமையில் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்துவேன். தோணியிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

Kedar-Jadhav

தோணி தான் உன்னால் பந்துவீச முடியும் என்ற தனநம்பிக்கையை என்னுள் விதைத்தார். ” என்று கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  சர்வதேச கிரிகெட் போட்டியில் New year அன்று சதம் விளாசிய கிரிகெட் வீரர்கள் விவரம்!

இந்நிலையில் இவர் வேஷ்டி கட்டிக்கொண்டு சூப்பர் ஸ்டாரின் வசனத்தை பேசியது வைரலாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ லிங்க் ..