Kedarnath

கேதர்நாத்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோயில் உலக பிரசித்தி. இந்த நகரின் பின்னணியில் தான் இப்படம் உருவாகியுள்ளது. தோணியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார், இவர் முஸல்மான் வாலிபராக நடித்துள்ளார். சாரா அலி கான் ஹீரோயினாக நடித்துள்ளார், புரோகிதரின் மகள் வேடம் இவருடையது. இந்த இருவருக்குள் ஏற்படும் காதல், அதனால் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றிய காட்சிகள் ட்ரைலரில் உள்ளது.

அபிஷேக் கபூர் படத்தை இயக்கியுள்ளார். அமித் திரிவேதி இசை. துஷார் கனதி ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நிறைய லைக்ஸ் குவித்து வருகின்றது.

2013 இல் நிகழ்ந்த நிலச்சரிவு, மழை வெள்ளத்தின் பின்னணயில் இந்த கதை உருவாகியுள்ளது, ஹோலிவுட்டின் டைட்டானிக் படத்துக்கு நிகராக இருக்கும் என்று கிசு கிசுக்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.