Sports | விளையாட்டு
தன்னடக்கத்துடன் தோனிக்கு நன்றி சொல்லிய கேதார் ஜாதவ். ஆனால் இப்படி ஒரு போட்டோவை ஏன் அப்லோட் செஞ்சீங்க ப்ரோ ?
IND vs AUS
இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர். டெஸ்ட் தொடரை வென்றனர். அடுத்ததாக ஒரு நாள் போட்டிகள் ஆட ஆர்மபித்தனர். தோனியின் ஆட்டத்தை பற்றியும் பல விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் சேஸிங்கில் இந்திய வெற்றி பெற்றது.
கேதார் ஜாதவ்
ஜாதவை பொறுத்தவரை இந்தியா அணியில் அவர் நுழைந்த சமயத்தில் தோனி தான் கேப்டன். தோனி தான் இவரின் பந்துவீச்சை ஊக்கப்படுத்தினார். பல நேரங்களில் பார்ட்னெர்ஷிப் பிரேக் செய்ய பயன்படுத்துவார். முதல் தர லெவெலில் அதிகம் பந்துவீசாத ஜாதவ் சர்வதேச அளவில் ஆல் ரௌண்டார் ஆனது இப்படி தான்.

kedar_jadhav__dhoni
இந்நிலையில் மூன்றாவது போட்டியில் சக சி எஸ் கே வீரர் அம்பதி ராயுடுக்கு பதிலாக கேதார் ஜாதவ் சேர்க்கப்பட்டார். மூன்றாவது போட்டியிலும் சேசிங் தான். கோலி 46 ரன்களில் அவுட் ஆக, நிதானமாக தோனி மற்றும் ஜாதவ் ஆடி வெற்றியை பெற்று தந்தனர். இந்த இருவரும் கடைசி வரை அவுட் ஆகாமல் கூலாக 121 ரன் பார்ட்னெர்ஷிப் எடுத்தனர்.
A Super Singams treat down under! MSD Thala and Adhaar Udhaar Kedar staged a Masterchase partnership! #Yellove #WhistlePodu #AUSvIND ?? pic.twitter.com/IjTbxTpHHN
— Chennai Super Kings (@ChennaiIPL) January 18, 2019
தொடர்ச்சியாக மூன்று பெட்டிகளிலும் அரை சதம் கடந்த தோனி பலரின் பாராட்டையும் தொடர்நாயகன் விருதையும் பெற்றார். அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் ஆடும் முதல் போட்டி ஜாதாவுக்கு. அதில் பந்துவீச்சில் கலக்கினார். அதே சமயம் பேட்டிங்கிலும் சாதித்தார். பலரும் தோனி நான்காம் இடத்திலும் தொடர்ந்து ஜாதவ் மற்றும் கார்த்திக் இறங்குவதே சரி என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஜாதவ் தன் ட்விட்டரில் தோனியின் போட்டோவுடன் ஸ்டேட்டஸ் பின்வருமாறு தட்டியுளார்.
Great series Mahibhai . Always get to learn a lot from you. Thank You for guiding me yesterday also. Keep entertaining us all .

MSD
“அருமையான தொடர் மாஹி ப்ரோ. எப்பொழுதும் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நேற்று என்னை வழி நடத்தியத்துக்கும் நன்றி. இதே போல் எங்களை குதூகலப்படுத்துங்கள்.” என்பதே அது.
இந்த ஒற்றை ஸ்டேட்டஸ் ஜாதவின் தன்னநடக்கத்தை நமக்கு உணர்த்தினாலும், இப்படி கிழிந்த ஸ்டைல் ஜீன்ஸ் போட்டோவை அப்லோட் செய்ததில் இருந்து அவர் எப்பேர்ப்பட்ட குசும்பு ஆசாமி என்றும் புரிகிறது.
இந்த ட்வீட் 21000 லைக், 1700 ரிட்வீட் பெற்று உள்ளது.
