Connect with us

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

தோட்டாக்கள் தெறிக்க மீண்டும் வந்துவிட்டான் ஜான் விக். John Wick: Chapter 3 திரைவிமர்சனம்.

ஹாலிவுட்டிலும் அதிரடி ஆக்ஷன் கலந்த மாஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அது போன்ற கலக்கல் மசாலா பட வரிசை தான் ஜான் விக். 2014 இல், 2017 இல் வெளியான இரண்டு பார்ட்டும் சூப்பர் டூப்பர் ஹிட்.

இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகி உள்ளது. முதல் இரண்டு பாகங்களை இயக்கிய சாட் ஸ்டாலெஸ்கி தான் இதனையும் இயக்கியுள்ளார். நியோ நாயர் ஜானரில் விட்ட இடத்தில் இருந்தே படம் துவங்குகின்றது ….

14 மில்லியன் டாலர் ஜான் விக் உயிருக்கு நிர்ணயிக்கப்பட, மனிதர் ஓட்டத்தில் உள்ளார். லைப்ரரியில் இருந்து டாலர் எடுத்து சென்று, தன்னை மொரோக்கா அனுப்புமாறு உதவி கோருகிறார். அங்கு தோழி  சோபியாவை சந்திக்கிறார் உதவி கோருகிறார்.

எவ்வாறு அவர் ஹை டேபிளின் மூத்தவரை சந்தித்தார், அவர்கள் இவர் உயிருக்கு பிக்ஸ் செய்த செயல், இவர் செய்ய வேண்டியது என்ன என அனைத்தும் சொல்லப்படுகிறது. அவர்கள் சொன்னதை செய்தாரா, அல்லது வழக்கம் போல தன் வழி தன் வழி தான் என தன் சூர கெத்தை மெயின்டயன் செய்தாரா என்பதே மீதி கதை.

அலசல் – வழக்கம் போல விறு விறு ஆக்ஷன் மட்டும் தான் படம் முழுக்க. அசத்தல் ஒளிப்பதிவு, பின்னணி இசை, சண்டை காட்சியமைப்பு என மீண்டும் கலக்கியுள்ளார். மேலும் அடுத்த பார்ட்டிற்கான ஸ்டோரி லயனுடன் தான் முடித்துள்ளனர்.

வெர்டிக்ட் – ஜான் விக் ரசிகர்களுக்கும், ஆக்ஷன் பிரியர்களுக்கும் இது ஒரு கொண்டாட்டம் தான். எனினும் ஹாலிவுட் படம் என செல்பவர்களுக்கு சிறிய ஏமாற்றத்தை தான் இப்படம் தரும்.

ரேட்டிங் – ஜான் விக் பான்ஸ் 3.25 / 5. சினிமா பான்ஸ்  2.5 / 5.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top