Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் குழப்பம்.. முருகதாஸ் பதில்.. கோபத்தில் மொத்த கதையையும் போட்டு உடைத்த பாக்யராஜ்
சர்கார் கதை தொடர்பான பஞ்சாயத்து இன்னும் முடிவடையாத நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் பத்திரிகையாளர்களை அழைத்து தன் பக்க நியாயத்தை கூறினார். என் கதையைப் படிக்காமல் வருண் கதையை மட்டும் படித்துவிட்டு ஒரு பக்கமாக நடந்து கொண்டார் பாக்கியராஜ் என கூறினார். அதற்கு பாக்கியராஜ் விளக்கம் சொல்கிறேன் என்ற பெயரில் படத்தின் முழுக்கதையையும் கூறிவிட்டார்.
சர்கார் படத்தின் கதை என்னவென்றால் ‘அமெரிக்காவில் வசிக்கும் தமிழர் ஒரு பெரும் தொழிலதிபராக இருக்கிறார். தேர்தலில் தனது ஓட்டை போடுவதற்காக தமிழகம் வருகிறார். அங்கே அவரது ஓட்டு கள்ள ஓட்டாக பிறரால் போடப்பட்டுள்ளது. அதிகாரிகளிடமும் சண்டையிடுகிறார் ஆனால் ஒன்றும் பண்ண முடியவில்லை. இதனை அவமானமாகவே அவர் கருதுகிறார்.
இதனால் கோபமடைந்த விஜய் வழக்கு போடுகிறார். அதனால் அந்த தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. இதனால் கோபமடைந்த அரசியல்வாதிகள் ஒரு தேர்தலை சந்திப்பது எவ்வளவு பெரிய கடினம் தெரியுமா? அதற்கு செய்யும் செலவு, வேலைகள், உழைப்பு என அனைத்தும் வீணானது. உனக்கெல்லாம் அரசியலைப் பற்றி என்ன தெரியும் என அவர்கள் கொளுத்திவிட இவர் சுயேச்சையாக தேர்தலில் நிற்கிறார்.

bhagyaraj
அடுத்த அதிசயம் என்னவென்றால் தொங்கு சட்டசபை வருகிறது. ஒரேயொரு உறுப்பினர் ஆதரவு இருந்தால்தான் ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ ஆட்சியமைக்க முடியும் . விஜய் எந்த பக்கம் செல்வார் என்பது போல் கதை அமைந்துள்ளது. விஜய்யை முதல்வராக ஏற்றுக்கொண்டு தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் போதும் என்று அவரை இரண்டு பக்கமும் கூப்பிடுகின்றனர்.
ஆனால் விஜய் ‘மக்களுக்கு நல்லது பண்ணும் என்று நினைத்துதான் தேர்தலில் நின்றேன். எனக்கு முதலமைச்சராகணும் என்ற எண்ணம் இல்லை. இப்போது முதல்வராக ஆனேன் என்றால் என்னால் உங்களை வைத்துக் கொண்டு நல்லது செய்ய முடியாது. அதனால் நான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன். அப்போதான் இந்த ஆட்சியின் குற்றம், குறைகளைச் சொல்லி திருத்த முடியும். ஆகவே, நல்லதொரு எதிர்க்கட்சி உறுப்பினராக எனது தொகுதி மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன் விஜய் என்ன செய்கிறார் என்பதுதான் கதை. ஆனால் இதே போன்றுதான் செங்கோல் கதையும் இருக்கிறதாம்.
