Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது கிருஷ்ணாவின் கழுகு 2 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !
2012ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் கழுகு. இத்திரைப்படத்தினை சத்யசிவா இயக்கியிருந்தார். கிருஷ்ணா குலசேகரன், கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் மூலமாக பிந்து மாதவி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Kazhugu 2
கோலிவுட்டில் இதுவரை தொடப்படாத கதையாக கழுகு படம் அமைந்தது. மலையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களை உயிரை பணயம் வைத்து எடுத்து கொடுக்கும் நாயகனுக்கும், அதே பகுதியில் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணுக்கும் உண்டாகும் காதலை அம்மக்களின் வாழ்வியலோடு இயக்குனர் சொல்லி இருப்பார்.
6 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். கிருஷ்ணா, பிந்து மாதவியே ஜோடியாக நடிக்க, முக்கிய வேடத்தில் காளி வெங்கட் நடிக்கிறார். இந்தப் படத்துக்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். இப்படத்தை திருப்பூர் பி.ஏ.கிருஷ்ணன் தயாரிக்கிறார்.
இந்நிலையில் இன்று இப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Kazhugu 2
பல வெற்றி படங்கள் இரண்டாம் பாகத்திற்கு தயாராகி வரும் நிலையில், கழுகு 2வும் அப்பட்டியலில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
