fbpx
Connect with us

பாகுபலி ஸ்டைலில் தமிழிலும் பிரம்மாண்டமாக வெளியாகப்போகிறதா நிவின் பாலியின் காயங்குளம் கொச்சுண்ணி ?

News | செய்திகள்

பாகுபலி ஸ்டைலில் தமிழிலும் பிரம்மாண்டமாக வெளியாகப்போகிறதா நிவின் பாலியின் காயங்குளம் கொச்சுண்ணி ?

காயங்குளம் கொச்சுண்ணி

நிவின் பாலி நடிப்பில் வெளிவரப்போகும் மலையாளப்படம். சமீபத்தில் மலையாளத்தில் வெளிவர இருக்கும் படங்களிலேயே மிக பிரம்மாண்ட படமாக இது இருக்கும் என்கிறார்கள். காயங்குளத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படம். நெடுஞ்சாலைகளில் செல்பவர்களிடம் திருடும் கதாபாத்திரம் நிவின் பாலியினுடையது. ராபின் ஹூட் பட ஸ்டைலில் இருக்குமாம். பணக்காரரிடம் இருந்து திருடி ஏழை மக்களுக்கு தருவாராம்.

Kaymkulam Kochunni

ரோஷன் ஆண்ட்ருஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். ப்ரியா ஆனந்த், மோகன் லால் முக்கியவேடத்தில் நடித்துள்ளார்கள். கோபி சுந்தர் இசையமைத்து வரும் இதற்கு பினோத் பிரதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்ரீ கோகுலம் மூவீஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

Kayamkulam Kochunni

சமீத்தில் வெளியான முதல் லுக் மற்றும், நேற்று வெளியான ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தமிழ் டப்பிங்

இந்நிலையில் ஹீரோயின் பிரியா ஆனந்த் ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இப்படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

மதன் கார்க்கி மற்றும் அவர் குழுவுடன் காயம்குளம் கொச்சுண்ணி தமிழ் டப்பிங்கில் இன்றைய நாள் முழுவது கழிந்தது என்று ஸ்டேட்டஸ் தட்டிவிட்டு போட்டோவும் அப்லோட் செய்துள்ளார்.

View this post on Instagram

#PriyaAnand #kayamkulamkochunni

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

எனவே இந்த சரித்திர படம் தமிழிலும் வெளியாவது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே பாகுபலி வாயிலாக நம்மை அசத்திய கார்க்கி, மீண்டும் அசத்துவார் என்ற நம்பிக்கையோடு தமிழ் வெர்ஷன் ட்ரைலருக்காக காத்திருப்போமாக.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top