Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், இந்த ஒரு தருணத்திற்காக தான் பல வருடங்களாக காத்துக் கொண்டிருந்தோம் என்று சொல்வதற்கு ஏற்ப கயல் மற்றும் எழிலின் கல்யாணம் நெருங்கிவிட்டது. எழிலை கயல் கல்யாண பண்ணக்கூடாது என்பதற்காக ஏகப்பட்ட பிரச்சனைகள் சதி வேலைகள் நடந்தது. ஆனாலும் அதையெல்லாம் ஒவ்வொன்றாக முறியடித்து கயல் தற்போது மணமேடைக்கு வந்து விட்டார்.
இருந்தாலும் இந்த கல்யாணத்தை நிறுத்திவிட்டு எழில் கையால் தாலி கட்டிக் கொள்ள வேண்டும் என்று தீபிகா கண்கொத்தி பாம்பாக ஒவ்வொரு காரியத்தையும் செய்து வருகிறார். அந்த வகையில் கயலின் ட்ரஸில் கெமிக்கல் பவுடரை போட்டு அதன் மூலம் கயலின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக தீபிகா பிளான் பண்ணி இருந்தார்.
எழிலின் கல்யாணத்தில் தோற்றுப் போன சிவசங்கரி
ஆனால் இந்த விஷயம் கயலின் தங்கை ஆனந்திக்கு தெரிந்த நிலையில் கயலிடம் நடந்த விஷயத்தை சொல்லி விடுகிறார். அத்துடன் உன்னுடைய ஸ்டைலில் அந்த தீபிகாவுக்கு சரியான பதிலடி கொடு என்று ஆனந்தி சொல்லிய நிலையில் கயல் மணமேடையில் இருந்து இறங்கி தீபிகாவிடம் பேசப் போகிறார்.
அப்பொழுது எல்லாத்துக்கும் தெனாவட்டாக பதில் சொன்ன தீபிகா, கயலின் கோபத்துக்கு ஆளாகி கன்னத்தில் பளார் என்று அடிவாங்கி விடுகிறார். இதை எல்லாம் பார்த்த சிவசங்கரி என்னுடைய மருமகளை எப்படி நீ அடிக்கலாம் என்று கேள்வி கேட்கிறார். அப்பொழுது நடந்த வாக்குவாதத்தால் நீங்கள் தீபிகாவுடன் சேர்ந்து எனக்கு எந்த அளவுக்கு தொந்தரவு கொடுத்தீர்கள் என்பதை நான் இப்பொழுதே எழிலிடம் சொல்கிறேன் என்று கயல் பிளாக்மெயில் பண்ணுகிறார்.
அப்படி கயல், எழிலிடம் சொல்லிவிட்டால் அம்மா என்று கூட பார்க்காமல் சிவசங்கரின் நிலைமை மோசமாகி போய்விடும். இதனால் பயந்து போன சிவசங்கரி, என் பையனிடம் எதுவும் சொல்லாதே என்று கயலிடம் கெஞ்சுகிறார். அப்பொழுது கயல் போட்ட கண்டிஷன் என்னவென்றால் நான் உங்க மகனிடம் எதுவும் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் இந்த தீபிகா இப்பொழுதே மண்டபத்தை விட்டு வெளியே போக வேண்டும் என்று அதிரடியாக சொல்லி விடுகிறார்.
இதனால் சிவசங்கரிக்கு வேறு வழியே இல்லை, தீபிகாவை வெளியே அனுப்பி தான் ஆக வேண்டும். ஆனாலும் தீபிகாவிடம் நீ இங்கிருந்து இப்போதைக்கு வெளியே போ. நான் இந்த கல்யாணத்தை நடக்காத படி வேறு ஏதாவது ஒரு முறையில் தடுத்து விடுவேன். அதன்படி நான் சொன்ன மாதிரி உனக்கும் என் பையனுக்கும் தான் கல்யாணம் நடக்கும் என்று தீபிகாவுக்கு வாக்குறுதி கொடுத்து சிவசங்கரி வெளியே அனுப்பி வைப்பார்.
ஆனால் எழில் மற்றும் கயல் கல்யாணத்தை இனி யார் நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதற்கு ஏற்ப கல்யாணம் ஜோராக நடக்கப்போகிறது. இதை தடுக்க முடியாமல் எழின் அம்மா சிவசங்கரி வேடிக்கை மட்டும் தான் பார்ப்பார். ஒரு வழியா கயல் அம்மா ஆசைப்பட்ட மாதிரி மகளின் கல்யாணம் நல்லபடியாக நடக்கப் போகிறது.
- Kayal: பெரியப்பாவோட கூட்டு சேர வில்லி அத்தை வந்தாச்சு
- எழிலை விட்டுக் கொடுக்க முடியாதுன்னு சொன்ன கயல்
- பெரியப்பா ராஜி விரித்த வலையில் சிக்கிய கயல்