புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பெரியப்பா செய்த சூழ்ச்சியை கண்டுபிடிக்க போகும் கயல்.. புதுசாக வந்திருக்கும் லவ்வர் பாயுடன் மோதும் எழில்

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், கயலை சுற்றி ஏகப்பட்ட பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் எழில் உடன் வாழாமல் கயலை பிரித்துக் காட்டவேன் என்று சிவசங்கரி பல வழிகளில் சூழ்ச்சி பண்ணி வருகிறார். அதையெல்லாம் தாண்டி எழிலுடன் சந்தோஷமாக வாழ்வதை விட்டுவிட்டு சொந்த கிராமத்திற்கு சென்று அப்பாவின் மீது ஏற்பட்ட கலங்கத்தை துடைக்க வேண்டும் என்று கயல், குடும்பத்துடன் போயிருக்கிறார்.

அங்கே போன இடத்தில் கயலை சின்ன வயசுல இருந்து காதலித்து வருகிறேன் என்று புதுசாக லவ்வர் அறிமுகமாகி எழிலுடன் மோதும் விதமாக காட்சிகள் வரப்போகிறது. இதையெல்லாம் எழில் சமாளித்து கயல் விட்ட சவாலை சரி செய்யும் விதமாக எழில் கடைசி வரை கயலுக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.

ஆனால் அதற்குள் வேறு ஒரு பிரச்சினை வந்துவிட்டது. அதாவது கயல் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் கிராமத்தில் இருக்கும் கோவிலில் இருக்கிறார்கள். இதை கேள்விப்பட்ட அந்த ஊர் பெரிய மனுஷங்க எப்படி அந்த குடும்பம் உள்ளே வரலாம் என்று பிரச்சனை பண்ணும் விதமாக வெளியே போக சொல்லி அவமானப்படுத்துகிறார்கள்

உடனே எழில், கயல் அப்பா உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் எவ்வளவு என்று சொல்லுங்கள் ஒரே செக்காக மொத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் கயல் அதெல்லாம் வேண்டாம் என்று எழிலை தடுத்து விட்டு ஊர்காரங்களிடம் பொறுமையாக பேசுகிறார். அந்த வகையில் எங்க அப்பா பணத்தை மோசடி செய்யவில்லை.

எங்க அப்பா அப்படிப்பட்ட ஆளும் கிடையாது நிச்சயமாக அதை நான் நிரூபித்துக் காட்டுவேன் என்று சொல்லப் போகிறார். அந்த வகையில் கயல் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாடி பெரியம்மா மற்றும் பெரியப்பாவின் சூழ்ச்சி ஏதோ இருக்கிறது என்பது போல் தெரிகிறது. ஏற்கனவே கயலிடம் மறைத்து இருக்கும் உண்மையை சொல்லலாம் என்று பெரியப்பா எடுத்த முடிவுக்கு வேண்டாம் என்று வடிவு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் என்ன நடந்தது என்ற உண்மை பெரியப்பா மூலம் கயலுக்கு தெரிய வந்தால் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்காது என்பதற்காக கயல் அப்பா பழி சுமந்ததற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்கும் விதமாக இன்னும் கொஞ்ச நாள்கள் கிராமத்தில் வைத்து கதை நகரப் போகிறது.

ஆனால் அதற்குள் இந்த சிவசங்கரி சதி தீட்டி கயல் மற்றும் எழிலுக்கு விரிசல் வரும்படி ஏதாவது பண்ணி புது பிரச்சினையை கொடுக்கப் போகிறார். ஆக மொத்தத்தில் இந்த நாடகம் முடியும் வரை கயல் ஒவ்வொரு பிரச்சினையிலும் மாட்டிக்கொண்டு அதை சரி செய்யும் விதமாகத்தான் கதை இருக்கப் போகிறது. சுபம் போடும் பொழுது மட்டும்தான் கயல் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பார் போல.

- Advertisement -

Trending News