ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

சிவசங்கரியை பிளாக்மெயில் பண்ணும் கயல், சந்தோஷத்தில் எழில்.. திருந்தாத பெரியப்பா, சூழ்ச்சியில் சிக்கிய மூர்த்தி

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில் கடந்த சில வாரங்களாக கயல் மற்றும் எழில் திருமணம் தான் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமாக ஒவ்வொரு பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் கயலுக்கு பதிலாக எப்படியாவது தீபிகாவை எழிலுக்கு கட்டி வைக்க வேண்டும் என்று சிவசங்கரி ஒரு பக்கம் பிளான் பண்ணி வருகிறார்.

இவருக்கு உடந்தையாக தயாளனும் பல சூழ்ச்சிகளை செய்து வருகிறார். அந்த வகையில் கயலை கடத்திக்கொண்டு வைத்தார். ஆனால் எப்படியோ எழில், கயலை மீட்டெடுத்து கூட்டிட்டு வந்தார். இந்நிலையில் மறுபடியும் எப்படியாவது கயலை கடத்தி கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று தயாளன் பிளான் பண்ணி வருகிறார். ஆனால் இந்த பிளான் எப்படியும் சொதப்பிவிடும் வேறு ஏதாவது ஐடியா கொடுங்க என்று அடியாட்கள் சொல்லிய நிலையில் மூர்த்திக்கு வலை விரித்து விட்டார்.

எழிலிடம் உண்மையை மறைக்கும் கயல்

மூர்த்தி, கயல் கல்யாணத்துக்காக பணத்தை ஏற்பாடு பண்ணிட்டு மண்டபத்திற்கு போகும் வழியில் அவருக்கு விபத்து ஏற்பட போகிறது. ஆனால் இதிலிருந்து எப்படி மூர்த்தி தப்பித்து விடுவாரா அல்லது தயாளன் பிளானில் சிக்கி விடுவாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் மண்டபத்தில் மூர்த்தி காணவில்லை என்று கயல் அம்மா தேடிக்கொண்டு போன் பண்ணி பார்க்கிறார்.

இதற்கு இடையில் மண்டபத்தில் பெரியப்பா மற்றும் வடிவு இருவரும் சேர்ந்து ஏதாவது பிரச்சனை பண்ணி கயல் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று பிளான் பண்ணி வருகிறார்கள். ஆனால் கயல் அத்தை ராஜி, பெரியப்பாவிடம் எந்த காரணத்தைக் கொண்டும் கயல் கல்யாணத்தில் தடங்கள் ஏற்பட கூடாது என்று எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார். ஆனாலும் திருந்தாத பெரியப்பா மற்றும் வடிவு கல்யாணத்தை நிறுத்த பிளான் பண்ணிக் கொண்டே வருகிறார்கள்.

அடுத்ததாக சிவசங்கரி, கயல் எப்படி தப்பித்தார் என்பதை தெரிந்து கொள்ளவும், நாம் தான் கடத்தினோம் என்ற விஷயம் தெரிந்து விடுமோ என்ற பயத்திலும் கயலை பார்த்து பேச போகிறார். ஆனால் அப்படி பேசும் பொழுது கயலுக்கு எல்லாம் உண்மையும் தெரிந்திருக்கிறது. நீங்க தான் கடத்தினீங்க என்பதும் எனக்கு தெரியும், மறுபடியும் எனக்கு ஏதாவது சிக்கலை ஏற்படுத்தி இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிளான் பண்ணுறீங்க என்பதும் எனக்கு தெரியும்.

இவ்வளவு தெரிந்தும் நான் ஏன் எழிலிடம் சொல்லாமல் இருக்கிறேன் என்றால் அவருக்கு நீங்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். அதனால் என் எழில் ஆசைப்பட்ட மாதிரி அவனுடைய கல்யாணத்தில் அம்மா இருக்க வேண்டும் என்பதற்காக உங்களை பற்றி நான் சொல்லாமல் வைத்திருக்கிறேன். ஆனால் இந்த ஒரு காரணத்தை வைத்துக் கொண்டே தொடர்ந்து எனக்கு கெடுதல் பண்ண ஆரம்பித்தால் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது.

பிறகு எழிலுக்கு தெரிந்தால் விபரீதம் ஆகிவிடும். அதனால் கொஞ்சம் பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று சிவசங்கரியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி பயமுறுத்தி வாயடைக்க வைத்து விட்டார். இதனால் அடுத்து சிவசங்கரி என்ன பண்ணுவது என்று தெரியாமல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்.

ஆனால் இது எதுவும் தெரியாமல் கயலை கல்யாணம் பண்ண போகும் சந்தோஷத்தில் எழில் மணமகனாக தயாராகி விட்டார். இனி யார் தடுத்தாலும் எழில் கயல் கல்யாணத்தை தடுத்து நிறுத்த முடியாது என்பதற்கு ஏற்ப ஜோராக இவர்களுடைய கல்யாணம் நடக்கப்போகிறது.

கயல் சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News