Connect with us
Cinemapettai

Cinemapettai

anandhi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல நடிகருடன் அநியாயத்திற்கு நெருக்கம் காட்டும் கயல் ஆனந்தி.. எல்லாம் ஒரு வாய் சோத்துக்காக தான்!

தமிழ் சினிமாவில் சில பல படங்களில் நடித்திருந்தாலும் இன்னமும் முன்னணி நடிகையாக வலம் வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் ஆனந்தி.

கயல் ஆனந்தி நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இன்னமும் பட வாய்ப்புகளுக்காக தயாரிப்பாளர்களிடம் கெஞ்சிக் கொண்டு தான் இருக்கிறாராம்.

இது ஒருபுறமிருக்க கயல் ஆனந்தி சினிமாவை நம்பாமல் வெப்சீரிஸ் பக்கம் களமிறங்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய குழந்தை தனமான தோற்றத்தை மாற்றி முழுக்க முழுக்க கிளாமர் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

வெப்சீரிஸ் என்றாலே நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டும் என நடிகைகளுக்கு உத்தரவிட்டு விடுவார்கள் போல. கொஞ்சம் சம்பளம் சேர்த்து பேசினால் நடிகைகள் எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்களாம்.

அந்த வகையில் அடுத்ததாக பிரபல நடிகர் ஒருவருடன் மிக நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் கயல் ஆனந்தி. ஒரு புதிய வெப் சீரிஸ் ஒன்றில் முழுக்க முழுக்க ரசிகர்களை ஏங்க வைக்கும் ஒரு மார்க்கமான கதாபாத்திரமாம்.

இந்த செய்தி தற்போது ரசிகர்களிடம் பரவவே உடனடியாக அந்த சீரிஸ் எப்போது வெளியாகிறது என ஆர்வமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
To Top