விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் காவ்யா அறிவுமணி. இந்த சீரியலை தொடர்ந்து அவர் தற்போது சினிமாவிலும் நடிக்க தயாராகி உள்ளார். இது குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.
இந்நிலையில் காவ்யா தன்னுடைய கிளாமர் புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் காவியா சமீபகாலமாக அதிக கிளாமர் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
நடிகைகள் பலரும் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வரிசையில் காவியாவும் தற்போது இணைந்துள்ளார். ஆனால் அவரை முல்லையாக மிகவும் குடும்ப பாங்கான கேரக்டரில் பார்த்த ரசிகர்களுக்கு அவரின் இந்த கவர்ச்சி போட்டோக்கள் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது.
தற்போது அவர் கருப்பு நிற இறுக்கமான டி ஷர்ட்டில் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். சைடு போசில் மிகவும் கிளாமராக இருக்கும் அந்த போட்டோவுக்கு பல மோசமான கமெண்டுகள் வருகிறது. மேலும் இதெல்லாம் உங்களுக்கு தேவையா என்றும் அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.