ரகடுபாயாக இருந்த விஜய்யை லவ்வர் பாயாக மாற்றிய காவிரி.. பிறந்தநாளுக்கு காதலை சொல்லப் போகும் விகா

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், மோதலில் ஆரம்பித்த சண்டை காதலில் போய் தான் முடியும் என்று சொல்வார்கள். அந்த வகையில் விஜய் ஆரம்பத்தில் ரகடுபாயாக இருந்தாலும் தற்போது காவிரி இல்லாமல் ஒரு நொடி கூட இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு லவ்வர் பாயாக மாறிவிட்டார். அதே மாதிரி தான் காவேரி மனதிற்குள் விஜய் நுழைந்து விட்டார்.

ஆனால் காதலை எப்படி விஜய் இடம் சொல்ல என்று ஒரு தயக்கத்துடனே இருந்து வந்தார். இந்த நேரத்தில் யமுனா செய்த காரியம் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் கெடுத்து விட்டது. நவீனுக்கு, யமுனா மீது எந்த விருப்பமே இல்லாமல் இருந்தாலும், காவேரி குடும்பத்தின் கனவை நிறைவேற்றும் விதமாக யமுனா நல்லா படித்து மார்க் வாங்கினால் தான் ஒட்டு மொத்த குடும்பமும் சந்தோஷப்படுவார்கள் என்பதனால் நவீன் அவ்வப்போது யமுனாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு நொடி கூட காவேரியை விட்டு பிரிய முடியாமல் தவிக்கும் விஜய்

ஆனால் இதை தவறாக புரிந்த யமுனா, நவீன் மீது ஆசைப்பட்டு காதலிக்க ஆரம்பித்து விட்டார். இதை புரிந்து கொண்ட நவீன் இதற்கு மேலையும் வளர்த்து விட்டால் சரி ஆகாது என்று யமுனாவை விட்டு விலக ஆரம்பித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் யமுனா செய்த டார்ச்சரால் நவீன் மனதில் காவிரி தான் இருக்கிறார் என்பதை போட்டு உடைத்து விட்டார்.

அத்துடன் என்னைத் தேடி காவிரி வருவாள் என்று சொல்லிய நிலையில் யமுனா தற்போது காவேரி மற்றும் நவீனை தவறாக புரிந்து கொண்டு பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார். இதைப் பற்றி நவீன் இடம் கேட்ட காவிரிக்கு கடைசியில் தெரிய வந்தது விஜய்க்கு நம் மீது விருப்பமில்லை என்பதுதான். இதனால் ஒட்டுமொத்தமாக நொறுங்கிப் போன காவேரி கொஞ்சம் கொஞ்சமாக விஜய்யை விட்டு பிரிய நினைக்கிறார்.

ஆனால் காவிரி மீது விஜய் தீராத காதலை வைத்து பொக்கிஷமாக லவ் பண்ணி வருகிறார். எந்த சூழ்நிலையிலும் காவிரியை நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவள் இல்லாத ஒரு நொடி கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. கொஞ்ச நேரம் அவளுடைய வீட்டுக்குப் போனாலே என்னால் இங்கே தனியாக இருக்க முடியாது. அந்த அளவுக்கு பைத்தியமாக இருக்கிறேன் என்று விஜய் புலம்பி கொள்கிறார்.

அத்துடன் காவிரியின் பிறந்தநாள் வருவதால் ஒரு வீடு பரிசாக கொடுக்கலாம் என்று பிளான் பண்ணிவிட்டார். அத்துடன் அந்த வீட்டில் சாவி கொடுக்கும் பொழுது பிறந்தநாள் பரிசாக காதலையும் சொல்லி உண்மையான மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழலாம் என்று விஜய் முடிவெடுத்து வைத்திருக்கிறார்.

ஆனால் இதற்குள் ராகினி மற்றும் யமுனா எந்தவித பிரச்சினையும் பண்ணாமல் இருந்தால் எல்லாம் சுமூகமாக நடக்கும். அதே நேரத்தில் வெண்ணிலா மற்றும் நவீனால் ஏற்பட போகும் குளறுபடிகளால் விஜய் மற்றும் காவிரி என்னெல்லாம் அவஸ்தைப்பட போகிறார்களோ என்பது தெரியவில்லை. ஆனாலும் இவர்களுடைய காதல் உண்மையாக இருப்பதால் கடைசி வரை ஒன்றாக இருந்து எல்லா பிரச்சினையும் சரி செய்து விடுவார்கள்.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -