புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய் மீது நம்பிக்கை இல்லாமல் பயப்படும் காவிரி.. பிளாக் மெயில் பண்ணும் ராகினி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி மற்றும் விஜய் கணவன் மனைவிகளாக இணைந்து மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழும் அளவிற்கு அவர்களுக்குள் ஒரு பந்தம் ஏற்பட்டுவிட்டது. அந்த வகையில் விஜய் மற்றும் காவிரியும் இனி யாரும் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்பதற்கு ஏற்ப கல்யாண வாழ்க்கையில் இணைந்து விட்டார்கள்.

ஆனால் காவிரியின் சந்தோஷத்தை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத ராகினி இந்த சந்தோஷத்தை உடனடியாக கெடுக்க வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார். அதனால் வெண்ணிலாவை கண்டுபிடித்து காவிரியை கூட்டிட்டு போய் காட்டிவிட்டார். காவேரி, வெண்ணிலாவை பார்த்த அதிர்ச்சியில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தடுமாறி நிற்கிறார்.

இதுதான் சான்ஸ் என்று ராகினி, அஜய் மற்றும் பசுபதி அனைவரும் சேர்த்து காவிரியை மிரட்டும் அளவிற்கு வெண்ணிலாவை வைத்து நோகடித்து பேசி விட்டார்கள். இதுதான் ஆரம்பம் என்பதற்கு ஏற்ப ராகினி கையில் காவிரியின் துருப்பு சீட்டு சிக்கிவிட்டது. காவிரியை பார்க்கும் பொழுதெல்லாம் ராகினி ,வெண்ணிலாவே வைத்து பிளாக்மெயில் பண்ணும் அளவிற்கு மிரட்டுகிறார்.

இத்தனை நாள் சிங்க பெண்ணாக சீரி பாய்ந்த காவேரி தற்போது விஜய் நம்மளை விட்டு போயிடுவாரோ என்ற பயத்தில் ராகனிடம் அடங்கிப் போகிறார். ஆனால் காவிரியின் முகத்தை பார்த்து விஜய் காவிரிக்கு ஏதோ ஒரு பிரச்சனை என்பதற்கு ஏற்ப புரிந்து கொள்வார். அந்த வகையில் ராகனிடம் அடிபணிந்து போகும் காவேரியின் நிலைமைக்கு என்ன காரணம் என கண்டுபிடித்து காவிரிக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக விஜய் நடந்து கொள்ளுவார்.

- Advertisement -

Trending News