செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 18, 2025

தலைக்கனம் பிடித்து ஆடும் கவின்.. தம்பி, கோமாளி அஸ்வின் லிஸ்டில் சேர்ந்து விடாதீங்க

பிக்பாஸில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் கவின். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு சிறிய இடத்தை சினிமாவில் தக்க வைத்துள்ளார்.

இவர் நடித்த லிப்ட் என்ற திகில் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து இவர் 2, 3 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அஜித்தின் அடுத்த படத்திலும் இவருக்கு ஒரு சின்ன கதாபாத்திரம் இருக்கிறது என்று பேச்சுசுக்கள் அடிபடுகிறது.

மலையாளத்தில் கலக்கி வரும் நடிகை அபர்ணா தாஸ் . கவினும் அபர்ணா தாஸும் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். இதனிடையே சினிமா துறையில் நன்றாக வளர்ந்து வரும் கவின், சில தவறான விஷயங்கள் செய்து வருகிறாராம்.

இவர் நடித்து வரும் படங்களில் அவரை மாற்றுங்கள், இவரை மாற்றுங்கள், அவர் வேண்டாம், இவர் வேண்டாம் என சில மாற்றங்களை கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்கிறாராம். இவரே இப்போது தான் நடிக்க வந்துள்ளார், வளர்ந்து கொண்டிருக்கும் போது இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று படக் குழுவில் உள்ளவர்கள் கூறி வருகின்றனராம்.

வளர்ந்து வரும் கவின் இவ்வாறு நடந்து கொள்வது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது. இதைப் போலத்தான் அஸ்வின் என்னும் நடிகர் நடந்து கொண்டு தன் பெயரை கெடுத்துக் கொண்டார்.

அஸ்வின் லிஸ்டில் சேர்ந்து விடாதீர்கள் என கவினின் நலம் விரும்பிகள் அறிவுரை வழங்கி வருகின்றனராம். அடுத்த படம் அஜித் கூட வேறு பண்ணுகிறீர்கள் உங்கள் வாயை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்றும் நாலா பக்கத்திலிருந்தும் கவினுக்கு அறிவுரை வருகிறதாம்.

Trending News