திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

ஒர்க் அவுட் ஆனதா ப்ளடி பெக்கர் டார்க் காமெடி.. 2வது நாள் கலக்சனில் ஜெயம் ரவியை மிஞ்சினாரா கவின்?

Bloody Beggar: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வருட தீபாவளி தல தீபாவளி போல் கொண்டாட்டமாக அமைந்துவிட்டது. சிவகார்த்திகேயனின் அமரன், கவின் நடித்த பிளடி பேக்கர், ஜெயம் ரவி நடித்த பிரதர் என எல்லாமே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்கள்.

சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம் ரவியுடன் மோதி வளர்ந்து வரும் நடிகர் கவின் ஜெயித்தாரா என பார்க்கலாம். நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கிறார் என்ற செய்தி வெளியான உடனே படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு கிளம்பி விட்டது.

இதைத் தொடர்ந்து கவின் பிச்சைக்காரர் வேஷத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானதும் தரமான ட்ரீட் காத்திருக்கிறது என தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதை தொடர்ந்து வெளியான படத்தின் Sneak peak காட்சிகளும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

அந்த அளவுக்கு முழு படமும் இருந்ததா என கேட்டால் அது பெரிய சந்தேகம்தான். கவின் எதற்காக இந்த கதையை தேர்ந்தெடுத்தார் என தெரியவில்லை ஆனால் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.

மற்றவர்களை ஏமாற்றி பிச்சை எடுக்கும் கவின் எதிர்பாராத விதமாக ஒரு அரண்மனையில் சிக்கிக் கொள்வதும் அந்த அரண்மனையில் இருப்பவர்கள் கவினை கொள்ளத் துடிப்பதும் தான் கதை. எதற்காக அவர்கள் கவினை கொல்ல நினைக்கிறார்கள், அவர்கள் நினைத்ததை சாதித்தார்களா, கவின் அந்த அரண்மனையை விட்டு வெளியேறினாரா என்பதுதான் படத்தின் மொத்த கதை.

கவினுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டராக இருக்கட்டும், படத்தில் நடித்த மொத்த கேரக்டராக இருக்கட்டும் எல்லோருமே தங்களுடைய வேலையை கணக்கச்சிதமாக முடித்து இருந்தார்கள். ஆனால் என்ன சொல்ல வருகிறோம் என்பதை இயக்குனர் அழுத்தமாக சொல்லாதது படத்தின் பெரிய மைனஸ்.

இந்த படத்திற்காக கவின் இந்த அளவுக்கு மெனக்கெட்டு இருக்க வேண்டாம் என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் தற்போதைய கருத்து. ஒரு ஐந்து நிமிடத்தில் முடிக்க வேண்டிய குறும்படம் போல் இருக்கும் கதையை இரண்டரை மணி நேரம் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.

இரண்டாவது நாள் கலெக்ஷன்:

ப்ளடி பெக்கர் படம் முதல் நாள் 2.5 கோடி வசூலித்திருக்கிறது. வெள்ளிக்கிழமையான நேற்று 1.8 கோடி வசூலித்து இருக்கிறது. மொத்தத்தில் இரண்டு நாள் கலெக்சன் 4.05 கோடி ஆகும். கலெக்ஷன் விஷயத்தில் ஜெயம் ரவியை கவின் தாண்டினாரா என கேட்டால் ஒரு சில புள்ளிகளில் ஜெயம் ரவி தான் மேலே இருக்கிறார்.

- Advertisement -

Trending News