சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

என்னது லிப்லாக் ஆ? தீமா தீமா-ன்னு கதறும் விக்னேஷ்.. நயன்தாரா ஓகே சொல்லுவாங்களா?

தனித்துவமான கதைத்தேர்வினால் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் கவின், வளர்ந்து வரும் நடிகர்களில் கவனிக்கப்படும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். டாடா படத்திற்குப் பின்னர் அவரது மார்க்கெட் சரசரவென ஏறிக்கொண்டிருக்கிறது.

நடிகர் கவின் சிவகார்த்திகேயனை போலவே, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார்.

அதன் பின்னர் பிக் பாஸ் வந்ததன் மூலம் மேலும் பிரபலமானார். இறுதி நாள் வரை வீட்டில் இருக்கும் திறமை இருந்தும், பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அதன் பிறகு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்த கவின், டாடா படத்திற்கு பிறகு தொடர்ந்து சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்.

என்னது லிப்லாக் ஆ?

ப்ளடி பெக்கர் படம் சுமாராக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வெற்றி விழா நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்ட கவின் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

குறிப்பாக கவின் எந்த நடிகையுடன் லிப்லாக் காட்சியில் நடிக்க ஆசை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கவின், அதுபோல எல்லாம் யாரும் இல்லை. கதைக்கு தேவைப்படுகின்றது என்றால், யாருடன் வேண்டுமானாலும் லிப்லாக் காட்சியில் கட்டாயம் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து அடுத்ததாக நயன்தாராவுடன் தான் கவின் நடிக்க போகிறார். அதுவும் ஒரு காதல் கதை. நயன்தாராவுடன் இப்படியான காட்சி இருக்குமா என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. கவின் இப்படி கூறி இருந்தாலும், நயன்தாரா அதுக்கெல்லாம் ஒப்புக்கொள்ளமாட்டார்.

கணவன் உருகி உருகி தீமா படலையெல்லாம் எழுதி உஷார் செய்து வைத்திருக்கிறார். அப்படி இருக்கையில் நயன்தாரா அந்த கட்சியில் நடிக்க வாய்ப்பே இல்லை என்று நயன்தாரா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News