Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக் பாஸ் கவின் உடன் ஜோடி போட்ட இன்னொரு பிகில் பட நாயகி.. குஷியில் கவின் அர்மி

kavin-lift

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் கவின் உடன் ஜோடி போட்ட இன்னொரு பிகில் பட நாயகி.. குஷியில் கவின் அர்மி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் பிரபலமானவர் கவின். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார்.

தற்போது அவரது ரசிகர்கள் கூட்டம் இரண்டு மடங்காகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த ரசிகர்கள் எப்போது கவின் நடிக்கும் படம் வெளியாகும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

லிப்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இணையதளத்தில் ட்ரெண்டானது. கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த அமிர்தா ஐயர் தான் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது நமக்கு தெரியும்.

ஆனால் இந்த படத்தில் மற்றும் ஒரு நடிகை பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டியும் நடிப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

kavin-lift-cinemapettai

kavin-lift-cinemapettai

படத்தை பற்றிய அனுபவத்தை கூறுகையில் கவினுக்கு பெரிய இதயம் என்றும் மற்றுமொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் கிரண் கொண்டவின் நட்பு தன்னை கவர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சீரியலின் மூலம் கவின்,கிரண் இருவரும் நெருங்கிய நண்பர்கள். லயோலா காலேஜில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது கவினுக்கு, அவர்கள் இந்த படம் எப்போது வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top