Tamil Cinema News | சினிமா செய்திகள்
புது கெட்டப்பில் மாஸ் காட்டும் பிக் பாஸ் கவின்.. ஆள் அடையாளமே தெரியலையேப்பா!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின்
அதன் பின் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 3-ல் பங்கேற்ற கவினுக்கு ஆர்மியே உருவாக இருந்த நிலையில், லாஸ்லியாவின் மீது காதல் வயப்பட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டார்.
பின்பு, லாஸ்லியாவின் மீது ஏற்பட்ட காதலை முறித்துக்கொண்டு சினிமாவில் முன்னேறுவதிலேயே அதிகம் கவனம் செலுத்தி வந்தார் கவின்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இவருக்கு அவ்வளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் ரொம்ப ஆக்டிவாக இருப்பார்.
தற்போது இவர் தனது சினிமா பயணத்திற்காக வித்தியாசமான ஹேர் ஸ்டைலை உருவாக்கி மாஸ் ஹீரோவாக மாறியுள்ள சமீபத்திய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த போட்டோவில், கவின் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பின்னாவது படவாய்ப்புகள் கிடைக்கும் என்பதுதான் கவின் உடைய பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

kavin-2
