Videos | வீடியோக்கள்
உலகத்துல பாதி பிரச்சனை உன்ன பெத்தவனால தான்.. கவின் நடிப்பில் வைரலாகும் DADA டீசர்
பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.
சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் அதிக பிரபலமானார். இதற்கு முன்பு அவர் ஒன்றிரண்டு திரைப்படங்களில் சிறு கேரக்டர்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.
அந்த வகையில் தற்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கும் கவின் கடைசியாக லிப்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். திகில் கலந்த திரில்லர் பாணியில் வெளிவந்த அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ஊர் குருவி, டாடா என்னும் படங்களில் அவர் அடுத்தடுத்து கமிட்டானார்.
Also read: அடுத்த கவின், லாஸ்லியா இவங்கதான்.. புருஷன், பொண்டாட்டியா தான் வெளியில போவாங்க போல
அதிலும் டாடா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் வியக்க வைத்தது. ஏனென்றால் அந்த போஸ்டரில் கவின் ஒரு குழந்தையுடன் கூட்டத்தில் ஒருவராக நடந்து செல்வது போல் இருந்தது. இதன் மூலம் அவர் குழந்தைக்கு அப்பாவாக இப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த டீசரை நடிகர் ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், நெல்சன், தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ஆகியோர் வெளியிட இருக்கின்றனர். இதனால் சோசியல் மீடியா தற்போது மிகவும் பரபரப்பாக இருக்கிறது. ஏனென்றால் கவினுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
Also read: குழாயடி சண்டையாக மாறிய லாஸ்லியா, கவின் காதல்.. ராஜு பாய் கூறிய பகீர் தகவல்
அந்த வகையில் இந்த டீசரை காண ரசிகர்கள் காலை முதலே உச்சகட்ட ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இப்படி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. டீசரின் ஆரம்பத்திலேயே ஹீரோயின் அபர்ணா தாஸ் கர்ப்பமாக இருப்பது போன்று ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து ஒவ்வொரு காட்சிகளும் ரகளையாக இருக்கிறது. பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.
