2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் நாலாவது சீசனில் போட்டியாளராக அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகர் கவின். அவர் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் அவர் பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட பின்பு தான் அனைவருக்கும் தெரியும்,
பீட்சா, நட்புனா என்னன்னு தெரியுமா, இன்று நேற்று நாளை, சத்ரியன் போன்ற படங்களில் சப்போர்ட் ஆக்டராக நடித்திருந்தாலும் இவரை சினிமாவில் வளர்த்து விட்டது லிப்ட், டாடா போன்ற படங்கள் தான். அதன் பிறகு ஒன்று இரண்டு படங்களில் நடித்தாலும் கை கொடுக்கவில்லை.
கடைசியாக கவினுக்கு பிளடி பெக்கர் படம் வெளிவந்து மோசமான தோல்வியை கொடுத்தது. இரண்டு, மூன்று படங்களில் நடித்து ஓரளவுக்கு பெயர் வாங்கி வந்த கவினுக்கு, இப்பொழுது முழுமையான ஸ்டார் அந்தஸ்து கிடைத்துவிட்டது என்ற கர்வம் தலைக்கேறி சுற்றிக் கொண்டிருக்கிறாராம்.
ஏற்கனவே இவர் நடித்த படங்களில் பாடல் காட்சிகளில் இவரது குறுக்கீடு அதிகமாக இருக்கிறது என கம்ப்ளைன்ட் வந்தது. சாண்டி மாஸ்டர் choreographஇல் தலையிட்டு பல விஷயங்களை மாற்றி ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரச்சனை செய்தார் கவின்.
இப்பொழுது ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் கவின் “கிஸ்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றுள்ளது. அங்கே 15 மாடிகள் கொண்ட மது பார் உள்ள ஒரு பில்டிங்கில் இரண்டாவது தளத்தில் சூட்டிங் நடைபெற்றது. லிப்டில் ஏரிய கவின் அது ஸ்லோவாக சென்றதால் கோபப்பட்டு இதை சரி செய்த பின் என்னை கூப்பிடுங்கள் என கேரவன் சென்று படுத்து தூங்கி விட்டாராம். இரண்டாவது மாடியில் நடைபெற்ற சூட்டிங் கூட போக முடியாதாம்.