விஜய் மீது இருக்கும் தீராத காதலால் வேதனையை அனுபவிக்கும் காவேரி.. ராகினியால் ஏற்படப் போகும் புது பிரச்சினை

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் மீது காவிரி ரொம்பவே கோபமாக இருக்கிறார். அதற்கு காரணம் ஒப்பந்தத்தின்படி கல்யாணம் பண்ணின விஷயத்தையும், அந்த டைம் முடிந்த பிறகு காவிரியை உன்னுடன் சேர்த்து வைக்கிறேன் என்று நவீனிடம் விஜய் கொடுத்த வாக்குறுதி தான். இதை தெரிந்து கொண்ட காவிரி, அப்படி என்றால் விஜய்க்கு என் மீது எந்தவித காதலும் வரவில்லை.

சும்மாதான் நம்முடன் சிரித்து பேசி பழகி வருகிறார். நான் தான் தேவையில்லாமல் அவரை மனதில் நினைத்து கொண்டேன் என்று காவேரி பீல் பண்ணுகிறார். ஆனாலும் விஜய் மீது காவிரிக்கு இருக்கும் தீராத காதலால் நவீன் இடம் சொன்ன அந்த வார்த்தையை நினைத்து ரொம்பவே வேதனையை அனுபவிக்கிறார். இதனால் பழையபடி விஜய் இடம் சிரித்து பேச முடியாமல் அழுது கொண்டே இருக்கிறார்.

உண்மையை கண்டுபிடிக்க போகும் ராகினி

இதை பார்த்த விஜய், எதனால் காவேரி டல்லாக இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியாமல் எதையாவது பேசி காவிரி மனசை மாற்றப் பார்க்கிறார். ஆனால் காவேரி, எதற்கும் இடம் கொடுக்காமல் விஜய்யை விட்டு விலகலாம் என்று முடிவுடன் பேச ஆரம்பித்து விட்டார். ஒரு பக்கம் காவேரி, விஜய்யை தவறாக புரிந்து கொண்டு கடுமையாக நடந்து கொள்கிறார்.

இன்னொரு பக்கம் விஜய்க்கு, காவேரி மீது காதல் வந்து விட்டதால் எப்பொழுதும் காவிரியை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அந்த வகையில் காவிரி பிறந்தநாளுக்கு ஆசைப்பட்ட மாதிரி ஒரு வீடு வாங்கி கொடுக்கலாம் என்று பிளான் பண்ணி விட்டார். இதை தெரிந்து கொண்ட தாத்தாவும், விஜய்யிடம் உனக்கு ஏற்ற மனைவி காவிரி தான். அதனால் எந்த காரணத்தை கொண்டு அவளை கைவிட்டு விடாதே என்று சொல்கிறார்.

இதை கேட்ட விஜய், மனதிற்குள் காவிரி தான் என் மனைவி அவளை நான் மிஸ் பண்ணவே மாட்டேன் என்று சொல்லிக் கொள்கிறார். அடுத்ததாக கங்கா, யமுனாவிடம் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அதற்கு நவீன், காவிரிக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்ற விஷயத்தை மட்டும் அரைகுறையாக சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் நானும் நவீனை விரும்புகிறேன் என்று கங்காவிடம் சொல்லாமல் உண்மையை மறைத்து விடுகிறார்.

இதனைத் தொடர்ந்து காவேரி மற்றும் யமுனா வெளிய நின்னு பேசி வாக்குவாதம் பண்ணுகிறார்கள். அப்பொழுது யமுனா, எல்லா தவறும் காவிரி மீது தான் இருக்கிறது என்பது போல் காவிரியை திட்டுகிறார். இதற்கு எந்தவித பதிலையும் சொல்ல முடியாமல் காவிரி தவித்து வரும் நிலைமையில் யமுனா ஓவராக பேசி காவிரியை புண்படுத்தி விட்டார். இவர்களுக்குள் நடக்கும் வாக்குவாதத்தை ராகினி மறைந்திருந்து பார்க்கிறார்.

அந்த வகையில் ஏதோ மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது. அதை கூடிய சீக்கிரத்தில் கண்டுபிடித்து அந்த பிரச்சினையை பெருசாக்கி காவிரிக்கும், காவிரி குடும்பத்திற்கும் மிகப்பெரிய டார்ச்சரை கொடுக்க வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார்.

அதனால் ஒப்பந்தத்தின் படி தான் இவர்கள் கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள் என்று தெரிந்து விட்டால் நிச்சயம் ராகினி பிளான் பண்ணி விஜய் மற்றும் காவிரியை பிரிக்க சதி பண்ணி விடுவார். ஆனால் அதற்குள் விஜய் அவர் மனதிற்குள் இருக்கும் காதலை காவரிடம் சொல்லிவிட்டால் இந்த பிரச்சனைக்கு எல்லாம் மிகப்பெரிய தீர்வு கிடைத்துவிடும்.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -