புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய் மீது இருக்கும் காதலால் வெண்ணிலாவை பார்த்து பேசிய காவேரி.. ராகினி ஆட்டத்திற்கு முடிவு கட்டும் கங்கா

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி மற்றும் விஜய் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நேசிக்க ஆரம்பித்து ஒப்பந்தத்தின் படி கல்யாணம் பண்ணுவதை மறந்து விட்டு மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழ ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் இருவரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்துவிட்டு கடுப்பான ராகினி, காவிரியின் சந்தோஷத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக வெண்ணிலாவை கண்டுபிடித்து விட்டார்.

அத்துடன் காவிரியின் சந்தோசத்தை பறிக்க வேண்டும் என்பதற்காக ஆசிரமத்திற்கு காவிரியை கூட்டிட்டு போய் வெண்ணிலாவை காட்டி விஜய் மனதிற்குள் வெண்ணிலா தான் இருக்கிறார். வெண்ணிலா இங்கே இருக்கிறார் என்று விஜய்க்கு தெரிந்து விட்டால் உன்னுடைய நிலைமை என்னவாக இருக்கும் என்பது உனக்கு தெரியாதா? விஜய் இடம் சொல்லவா என்று பிளாக்மெயில் பண்ணும் அளவிற்கு ராகினி ஒவ்வொரு நிமிடமும் காவிரியிடம் சொல்லி துன்புறுத்தி வருகிறார்.

இதனால் காவேரி சந்தோஷம் இல்லாமல் ரண வேதனையை அனுபவித்து வருகிறார். அத்துடன் விஜய் இடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். பிறகு ஆசிரமத்திற்கு சென்று வெண்ணிலாவிடம் பேசினால் சரியாக இருக்கும் என்று போகிறார். அங்கே போனதும் வெண்ணிலாவிடம் விஜயின் புகைப்படத்தை காட்டி இது யாருன்னு தெரியுமா என்று கேட்கிறார்.

அதற்கு வெண்ணிலா என்னுடைய விஜய் என்று சொல்கிறார். இதை கேட்டதும் மனசு உடைந்து போன காவேரி யாரிடமாவது தன்னுடைய கஷ்டத்தை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். உடனே காவிரி அவருடைய அக்கா கங்காவிடம் சொல்லத் துணிந்து விட்டார். அந்த வகையில் விஜய் என்னை கல்யாணம் பண்ணுவதற்கு முன்னாடி வெண்ணிலாவை காதலித்தார்.

இப்பொழுதும் அவர் மனதில் வெண்ணிலா தான் இருக்கிறார். ஆனால் அந்த வெண்ணிலா பழைய விஷயங்களை மறந்து ஆசிரமத்தில் இருக்கிறார். ஆனாலும் விஜய் மட்டும் தான் அவருடைய ஞாபகத்தில் இருக்கிறார். இந்த விஷயம் விஜய்க்கு தெரிந்து விட்டால் என்னை விட்டு போய்விடுவாரோ என்று எனக்கு பயமாக இருக்கிறது என்ன பண்ணுவது என்று எனக்கு தெரியவில்லை என கங்காவிடம் சொல்லிக் காவிரி பீல் பண்ணி அழுகிறார்.

உடனே கங்கா, காவிரியே சமாதானப்படுத்தும் விதமாக இப்போதைக்கு வெண்ணிலாவை பற்றி எந்த விஷயமும் விஜய்க்கு தெரிய வேண்டாம். நீ அதை நினைச்சு கவலைப்படாதே என்று ஆறுதல் படுத்துகிறார். ஆனால் காவிரி நான் சொல்லாவிட்டாலும் ராகினிக்கு எல்லா உண்மையும் தெரியும். ராகினி சொல்லிவிட்டால் என்ன ஆகுவது என்று கேட்கிறார்.

அதற்கு கங்கா, ராகினின் ஆட்டத்திற்கு நான் முடிவு கட்டுகிறேன் என்று காவிரியிடம் சொல்லி பிளானை போடப் போகிறார். எது எப்படியோ காவிரி தற்போது கஷ்டப்படுவதை கங்காவிற்கு தெரியப்படுத்தி ஒரு ஆறுதலை தேடியது பார்க்க நன்றாகத் தான் இருக்கிறது. விஜய்க்கு தெரிந்தால் கூட வெண்ணிலாவுக்கு ஆதரவாக நின்று சரி செய்வாரே தவிர, நிச்சயம் யாருக்காகவும் எதுக்காகவும் காவிரியை விட்டுக் கொடுக்க மாட்டார்.

- Advertisement -

Trending News