செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

வெண்ணிலாவை வீட்டுக்கு கையோடு கூட்டிட்டு வரும் காவேரி.. அதிர்ச்சியில் உரையும் விஜய், ஜில்லுனு உருவாகும் காதல்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், என்னதான் காவேரி மனதில் விஜய் இருந்தாலும் விஜய் மனதில் காவிரி இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் ஒரு நெருடலான விஷயம் என்றால் ஒப்பந்தத்தின் படி கல்யாணம் பண்ணினது தான். அதனால் விஜய்யின் பிறந்தநாள் அன்று காவிரிக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக போட்ட ஒப்பந்தத்தின் பத்திரத்தை கிழித்து விடுகிறேன் என்று விஜய், தாத்தாவிடம் சந்தோஷமாக கூறிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அந்த நேரத்தில் காவேரி, வெண்ணிலாவை கையோடு வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். இதனை பார்த்த கங்கா, காவிரியை வழிமறித்து நீ என்ன தேவையில்லாத வேலையை பண்ணி உன் தலையிலே நீயே மண்ணை வாரி போட்டுக் கொள்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு காவிரி என்னை தடுக்காதே எல்லா விஷயமும் விஜய்க்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்.

ஆனால் கங்கா இப்படி பண்ணினால் உன் வாழ்க்கை என்ன ஆகும் என்று கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தியா என்று கேட்கிறார். அதற்கு காவிரி இந்த விஷயத்தில் நீ தலையிடாதே என்று சொல்லிவிட்டு வெண்ணிலாவை வீட்டிற்குள் கூட்டிட்டு போகிறார். அப்படி உள்ளே போனதும் வெண்ணிலாவை பார்த்ததும் விஜய் ஒட்டுமொத்த அதிர்ச்சியாகி உறைந்து போய்விட்டார்.

அத்துடன் கையில் வைத்திருந்த கல்யாண ஒப்பந்த பத்திரத்தையும் கீழே போட்டு விட்டார். என்னதான் விஜய் மனதில் காவேரி இருந்தாலும் வெண்ணிலா பார்த்த அந்த ஒரு நொடியில் தடுமாற்றம் அடைகிறார். அத்துடன் விஜயை பார்த்ததும் வெண்ணிலாவுக்கும் பழைய ஞாபகங்கள் வந்துவிடும் போல அந்த அளவிற்கு வெண்ணிலா முகத்தில் சந்தோஷங்கள் தெரிகிறது.

இருந்தாலும் வெண்ணிலா முழுமையாக குணமடையும் வரை விஜய் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளப் போகிறார். அந்த சமயம் கூட விஜய் மனதில் காவிரி தான் இருக்கிறார் என்று வெண்ணிலாவுக்கு தானாக புரிந்துவிடும். அந்த வகையில் இனி விஜய் மற்றும் காவிரி வாழ்க்கையில் தொந்தரவு பண்ணக்கூடாது என்று வெண்ணிலாவே, விஜய் வாழ்க்கை விட்டு பிரிந்து போகப் போகிறார்.

அதாவது ஆரம்பத்தில் இந்த கதை பிரியமானவளே படம் போல ஆரம்பித்து இருந்தாலும் தற்போது ஜில்லுனு ஒரு காதல் படத்தைப் போல விஜய், வெண்ணிலாவை விட்டுவிட்டு காவிரியே மனசார ஏற்றுக்கொண்டு வாழப் போகிறார். அதனால் வெண்ணிலா வந்த வழியிலேயே திரும்பி போகப் போகிறார்.

- Advertisement -

Trending News