ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், தனுஷ் நடித்த “அனேகன்” படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் அதே படநிறுவனத்துக்காக பிரம்மாண்டமாக இயக்கியுள்ள படம் “கவண்”. இந்தப்படத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்கள். “காதலும் கடந்து போகும்” படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியும், மடோனா செபாஸ்டியனும் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் இது. டி.ராஜேந்தர் காமெடி வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு “ஹிப் பாப் தமிழா” ஆதி இசை அமைத்துள்ளார். இவரின் இசையில் ஏற்கெனவே “ஹேப்பி நியூ இயர்…” என்ற பாடல் சிங்கிள் டிராக்காக வெளிவந்துள்ளது.

இந்நிலையில், “கவண்” படத்தின் மொத்த பாடல்களையும் பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியிடுகிறார்கள். இசைவெளியீட்டுவிழா நடத்தாமல் கவண் ஆடியோ நேரடியாக மார்க்கெட்டுக்கு வரவிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் “கவண்” படத்தின் பிசினஸ் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், தென்ஆற்காடு, வடஆற்காடு ஆகிய ஏரியாக்களின் விநியோக உரிமை விற்கப்பட்டுவிட்டன.

சென்னை, செங்கல்பட்டு ஏரியாக்களின் பிசினஸ் முடியவில்லை. மேற்கண்ட ஏரியாக்களின் விலை வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் கவண் படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. எனவே படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே நேரடியாக வெளியிடுகிறது. உலகமெங்கும்”கவண்” படத்தை மார்ச் 31ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம்.