Kavan_Dora

அனேகன் படத்தை தொடர்ந்து வேறொரு கதைக்களத்தில் கே.வி. ஆனந்த் இயக்கியிருக்கும் படம் கவண். விஜய் சேதுபதி, மடோனா, டி.ராஜேந்தர் என பலர் நடித்திருக்கும் இப்படம் நேற்று வெளியாகியுள்ளது.

இப்பட டிரைலர் ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்பை படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.விஜய் சேதுபதி படங்களில் இந்த படம் அதிக வசூலை தரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

முதல் நாளில் சென்னையில் மட்டும் கவண் ரூ.35 லட்சம் வசூல் செய்துள்ளதாகவும்,மேலும் தமிழ் நாடு முழுவதும் ரூ.2.9 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இதேபோல் நேற்று ரிலீஸ் ஆனா டோரா படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சென்னையில் மட்டும் சுமார் ரூ.19 லட்சம், தமிழ் நாடு முழுவதும் ரூ.1.7 கோடி இப்படம் முதல் நாளில் வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளர்த்து.நிச்சயமாக நயன்தாரா ஹிட் படங்கள் வரிசையில் டோரா சேரும் என்பது உறுதி.