Vijaysethupathi_Kavan

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இன்று முன்னணி இயக்குனராக பல வெற்றிப் படங்களை கொடுத்திருப்பவர்

கே.வி.ஆனந்த். விஜய் சேதுபதி, டி.ராஜேந்திரரை வைத்து இவர் இயக்கியுள்ள கவண் படம் அண்மையில் வெளியானது.

விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இல்லை என்றாலும் “லாஜிக் தேவையில்லை மேஜிக்கே போதும்” என்கிற அடிப்படையில் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி தீர்க்கிறார்கள். இதன் விளைவாக முதல்நாளில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ. 3.10 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் முதல் மூன்று நாட்களில் இப்படம் ரூ. 10.17 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.