விஜய் நடித்து 2011 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம் தான் காவலன். இந்த திரைப்படத்தை சித்திக் எழுதி இயக்கினார். இதில் விஜயும் அசினும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இது சித்திக்கின் மலையாளப் திரைப்படம் பாடி கார்டின் ரீமேக் ஆகும். ராஜ்கிரண், மித்ரா குரியன், ரோஜா செல்வமணி, வடிவேலு ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

neepa
neepa

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே வெற்றி பெற்றது, படத்தில் கதை எவ்வளவு முக்கியமான ஒன்றோ அதேபோல் காமெடியும் அவசியமாக இருந்தது.படத்தில் வடிவேல் மற்றும் சீரியல் நடிகை நீபா காமெடியில் கலக்கினார்கள்.

நடிகை நீபா படத்தில் விஜய்யுடன் நடித்ததை பற்றி பேசியுள்ளார் அவர் கூறியதாவது விஜய்யை எனக்கு பள்ளி பருவத்தில் இருந்தே பிடிக்கும் நான் விஜய்யின் ரசிகை அதேபோல் என்னுடைய ஆல் டைம் பேவரட் ஹீரோ விஜய் தான், அவருடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி எல்லாரும் நிறைய விஷயங்களை பற்றி பேசிருக்கோம், வடிவேலு சார் எல்லாரையும் சிரிக்கவைப்பார், எனக்கு காமெடி காட்சிகளும் வரும் என்பதை நிருபிக்கவே அந்த படத்தில் நடித்தேன் என கூறியுள்ளார்.