Connect with us
Cinemapettai

Cinemapettai

லேடி சூப்பர் ஸ்டாருடன் போட்டி போடும் நடிகை கஸ்தூரி.. இதென்னடா அம்மனுக்கு வந்த சோதனை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லேடி சூப்பர் ஸ்டாருடன் போட்டி போடும் நடிகை கஸ்தூரி.. இதென்னடா அம்மனுக்கு வந்த சோதனை

தமிழ் சினிமாவில் 90களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் பணியாற்றியுள்ளார். தற்போது தமிழில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் கஸ்தூரி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதனால் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

இவ்வாறிருக்க கஸ்தூரி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது கஸ்தூரி வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் அவர் அம்மன் வேடத்தில் இருக்கிறார்.

மேலும் இந்த போட்டோவை கஸ்தூரி, நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியான அடுத்த நாளே வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இதனால் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்கு போட்டியாக கஸ்தூரி அம்மன் படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என்ற தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.

kasturi-cinemapettai

kasturi-cinemapettai

எனவே, இந்த புகைப்படத்தைப்பார்த்த நெட்டிசன்கள், இதென்னடா அம்மனுக்கு வந்த சோதனை என்று புலம்புகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top