கடந்த சனிக்கிழமை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலுடன் உரையாட அவருடன் ஜோடியாய் பல படங்களில் நடித்து புகழ் பெற்ற ஸ்ரீப்ரியா அவர்களும், உடன் தற்போதைய காமெடி நடிகர் சதீஷ் அவர்களும் வந்திருந்தனர்.

கமலுடன் உரையாடிய சதீஷ், தான் ஒரு நபரை பற்றி சொல்ல வேண்டும் அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை. உங்கள் படத்தை பார்த்து ரசிகர்களாகிய நாங்கள் பல விஷயங்களை கற்றுள்ளோம், ஆனால் உங்கள் வசூல் ராஜா படத்திலிருந்து ஒருவர் கட்டிபிடி வைத்தியத்தை நன்கு கற்றுக்கொண்டு அதனை பிக் பாஸ் வீட்டில் தினமும் செய்து கொண்டுள்ளார் என்றார்.

Sathish-Comedy-Actorஅவர் மறைமுகமாய் சினேகனை கிண்டல் செய்தது அனைவருக்கும் தெரிந்ததே. சிநேகன் போல் நடித்து காட்ட விரும்புகிறேன் என்று சதீஷ் மேடையில் சொன்னார்.

கமலும் சரி என்றவுடன், சிநேகன் சக்திக்கு ஏதாவது பிரச்சனை என்றால் விரைவில் சரியாகிவிடும் என்று ஒட்டறை வார்த்தையில் ஆறுதல் சொல்வார், ஆனால் இதுவே நமீதா என்றால் சிநேகன் நமீதாவை எப்படி கட்டிப்பிடிபார் என்று சொல்வதற்கு எனக்கு கட்டிப்பிடிக்க ஒரு ஆள் வேண்டும் என்றார் சதீஷ்.

உடனே கமல் எழுந்திருந்து என்னை கட்டிக்கொள்ளுங்கள் என்றார். சதீஷ் தயங்கியபடி கமலை கட்டிக்கொண்டு நமீதாவிற்கு சிநேகன் ஆறுதல் சொல்வதைபோல் நடித்துக்காட்டினார். ஒவ்வொருமுறை கமல் விலகும்போதும் அவரை இறுக்கி அனைத்து கமலின் முதுகில் தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்வதுபோல் நடித்துக் காட்டினார் சதீஷ்.

மேலும் ஆர்வ் ஏன் பரணிக்கு மருத்துவ முத்தம் கொடுத்து அவரது தனிமை பிரச்சனையை போக்கவில்லை என்று குறும்புடன் கேட்டார் சதீஷ்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: கலாசாரம் கலாசாரம்னு சிநேகன ட்விட்டர்ல டாரு டாரா கிழிக்குற சதீஷ், ஹர ஹர மகா தேவகினு ஒரு முழு நீள நீலப்படத்துல நடிகிறியேப்பா அது மட்டும் கலாச்சாரமா?