sathyaraj-sibiraj

பாகுபலி

bahubali

இயக்குனர் ராஜமௌலி அவர்களின் பிரம்மாண்ட படைப்பு. இரண்டு பாகங்களாக வெளிவந்து இந்தியாமட்டுமன்றி உலகையே கலக்கிய படம். கதாபாத்திரங்களின் நிஜப்பெயர்களை படம் பார்ப்பவர்கள் மறந்துபோகும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது இப்படம்.

Bahubali

பாகுபலி, அவந்திகா, தேவசேனா, பல்லதேவா, சிவகாமிதேவி என பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், தன் விசுவாசம், வீரம், பாசம் என கலக்கியிருப்பார் கட்டப்பா. இரண்டாம் பகுதிக்கு எதிர்பார்ப்பை கொடுத்ததே ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார் என்பது தான்.

இந்நிலையில் கட்டப்பா தோற்றத்தில் சத்யராஜ் அவர்களின் மெழுகு சிலையை பிரபல லண்டன் அருங்காட்சியகம் வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகின்றது.

#Sathyaraj

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இதனை சிபி ராஜ் தன் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த நடிகரை ஒருவருக்கு அங்கு சிலை வைப்பது இதுவே முதல் முறை.

திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் கெட்டப் இதுதான்.! வைரலாகும் புகைபடம்.!