பிரம்மாண்டத்தின் உச்சமாக ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 படம் இம்மாதம் வெளியாக இருக்கிறது. படக்குழுவும் டிரைலர் வெளியிடுவது, பாடல்கள் வெளியிடுவது என புரொமோஷன்களில் பிஸியாக இருக்கின்றனர்.

தெலுங்கு பாடல்கள் வெளியான நிலையில் பாகுபலி 2 படத்தின் தமிழ் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் பாகுபலி ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர். அதாவது பாகுபலி படத்தின் முதல் பாகத்தை இதுவரை பார்க்காதவர்கள் வரும் ஏப்ரல் 7ம் தேதி பார்க்கலாமாம். இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.