மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள காற்று வெளியிடை படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் படை அதிகாரியாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் கார்த்தி நடிக்கும் காற்று வெளியிடை படத்துக்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். காற்று வெளியிடை படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் ஏப்ரல் 7ம் தேதி வெளியிடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள காற்று வெளியிடை படத்தினை தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகையான அதிதிராவ் ஹைதி தமிழில் அறிமுகமாகிறார்.