கத்ரினா கைப் மீது காதலில் விழுந்த பிரபல நடிகர்.. உண்மையை போட்டு உடைத்த நண்பர்

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நாயகி கத்ரீனா கைப் பாலிவுட் பிரபல நடிகர் ஒருவருடன் இரவு நேரங்களில் டேட்டிங் செல்வது குறித்த செய்திகள் வெளியாகி பாலிவுட் சினிமாவை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாலிவுட் சினிமா நடிகைகளுக்கு மட்டும் எப்படித்தான் அவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிறது என்பதே தெரியவில்லை. நம்ம ஊரில் இருக்கும் பலருக்கும் பாலிவுட் நடிகைகள் ஃபேவரைட் ஆக இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்திய ரசிகர்களை வளைத்துப் போட்டவர்தான் கத்ரீனா கைப். இவர் கடந்த சில மாதங்களாக பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் விக்கி கௌஷல் என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் கிடைத்துள்ளது.

இருவரும் இரவு நேரங்களில் அடிக்கடி பார்ட்டிகளுக்கு செல்வதும், தனிமையில் இருப்பதும் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. இதை சமீபத்தில் நடிகர் விக்கி கௌஷலின் நண்பரும் பிரபல நடிகருமான ஹர்ஷ்வர்தன் என்பவர் இந்த உண்மையை பொதுமேடையில் போட்டுடைத்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் சல்மான் கான், ரன்பீர் கபூர் ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்ட கத்ரீனா கைப் தற்போது விக்கி கௌஷல் என்பவருடன் ஊர் சுற்றி வருவது கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் காதல் கதைகளுக்கு பஞ்சம் இல்லை. அங்கெல்லாம் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்வது கூட சாதாரண விஷயமாக பார்க்கப்படும் நிலையில் இந்த காதலை அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம் பாலிவுட் வாசிகள்.

katrina kaif vicky kaushal-relationship
katrina kaif vicky kaushal-relationship
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்