சமீபத்தில் வெளியான ‘மருது’ வெற்றி படத்தை அடுத்து விஷால் நடித்து வரும் அடுத்த படம் ‘கத்திச்சண்டை’. அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தை பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கி வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக முதன்முறையாக தமன்னா நடிக்கும் இந்த படத்தில் ஜெகபதி பாபு மற்றும் தருண் அரோரா வில்லன்கள் கேரக்டர்களில் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு மீண்டும் காமெடியனாக நடிக்கும் இந்த படத்தில் சூரியும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  தயாரிப்பாளர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டாரா விஷால்? ரகசியம் வெளிவந்தது

இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. Okadochaadu என்பதே இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் ஆகும். விஷாலின் படங்கள் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நல்ல வசூலை செய்து வருவதால் இப்படம் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது.

அதிகம் படித்தவை:  சர்ச்சையில் சிக்கிய விஷால்.. ராமதாஸ் விட்ட பதிவால்,கொந்தளிக்கும் திரைத்துறையினர் ?

அக்டோபர் 7ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த ‘ஆம்பள’ மற்றும் ‘கதகளி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.