சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கியிருக்கும் கத்தி சண்டை படத்தில் விஷால் ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். நந்தகோபால் இப்படத்தை மாபெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். எனவே இப்படத்தின் வியாபாரத்தை வடிவேலு பெயரை சொல்லி பெரிதளவில் நடத்தி வருகிறதாம் தயாரிப்பு தரப்பு.

குறிப்பாக இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவிக்கு ரூ. 6.2 கோடிக்கு விற்றுள்ளதாம் படக்குழு. பொதுவாக விஷாலின் படங்கள் 3 கோடிக்கும் குறைவாகவே வியாபாரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் ஒரு காமெடி நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு ஒரு மணிநேரம் இலவசமாக கலந்துகொள்ள வேண்டும் என்கிற கண்டிஷனோடுதான் இந்த படத்தின் உரிமையை வாங்கியிருக்கிறதாம் சன் டிவி.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஹிப்ஹாப் தமிழா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும் வரவேற்பைப் பெற்றுள்ளது.