Connect with us

Cinemapettai

மூன்று நபர்களுக்கு தன் நன்றியை தெரிவித்து, போட்டவுடன் பிகில் பட அப்டேட்டை பகிர்ந்த கதிர்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூன்று நபர்களுக்கு தன் நன்றியை தெரிவித்து, போட்டவுடன் பிகில் பட அப்டேட்டை பகிர்ந்த கதிர்.

அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரஹ்மான் தான் இசை. படக்குழு தீபாவளி ரிலீஸ் நோக்கி வேலை செய்துவருகின்றனர். இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அடிக்கடி அந்த நட்சத்திரங்கள் போட்டோஸ், அல்லது ஸ்டேட்டஸ் படம் பற்றி தட்டுவது வழக்கம் தான்.

அந்த வரிசையில் நடிகர் கதிர் தன் பகுதி ஷூட்டிங் முடிந்தது என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். இந்த போட்டோவில் சந்தோஷமாக தான் இருப்பதை பார்க்கும் பொழுதே, மனதில் உள்ளது என்னவென்று உங்களுக்கு புரிந்துவிடும் என கூறியுள்ளார். மேலும் தன்னை தளபதி விஜய் கட்டிப்பிடித்து அவரது அளவற்ற அன்பை வெளிப்படுத்தியது. எனக்கு பெரும் மகிழ்ச்சி. மிகுந்த அன்புடன் என் நன்றிகள் இந்த அழகிய தருணங்களுக்காக. இவ்வனைத்தையும் நிஜமாக்கிய இயக்குனர் அட்லீ மற்றும் செலிபிரிட்டி மானேஜ்மேண்ட் செய்யும் ஜெகதீஷுக்கும், தன் நன்றிகளை பகிர்ந்துள்ளார்.

இந்த போட்டோவில் உள்ளது தான் கதிரின் பட கெட் – அப் எனில், கட்டியம் விஜய்யின் டீம்மில் ஆடும் எதோ ஒரு பெண்ணின் பாய் பிரெண்ட் வேடம் தான் இவருடையது என நெட்டிசன்கள் அடித்து கூறுகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top