Connect with us
Cinemapettai

Cinemapettai

வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் சசிகுமார்.. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உறுதியான அடுத்த படம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் சசிகுமார்.. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உறுதியான அடுத்த படம்!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் பைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் சார்பில் கதிரேசன் தயாரிப்பில் வெளியான ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, இருவரும் இணைந்து ‘ஆடுகளம்’ என்ற படத்தை உருவாக்கி தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி கண்டனர்.

இந்தநிலையில் கதிரேசனும், வெற்றிமாறனும் இணைந்து தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே வெற்றிமாறன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் ‘உதயம்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘வடசென்னை’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது நாம் அறிந்ததே.

தற்போது வெற்றிமாறனும் கதிரேசனும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார்களாம். இந்தப்படத்திற்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுத உள்ளதாகவும், சசிகுமார் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தப் படத்திற்கான இயக்குனர் மற்றும் படக்குழுவினர்களை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறுகின்றனர் சினிமா வட்டாரங்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு பின் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

எனவே, 10 ஆண்டுகளுக்குப் பிறகு கதிரேசனும், வெற்றிமாறனும் இணைந்து தயாரிக்க உள்ள இந்தப் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கிடக்கின்றனர்.

sasikumar-vetrimaran

sasikumar-vetrimaran

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top