பாண்டியனிடம் ராஜிக்காக போலீஸ் வேலையை பற்றி பேசும் கதிர்.. பழனிவேலுவை டார்ச்சர் பண்ணும் சுகன்யா

pandian stores 2 (38)
pandian stores 2 (38)

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் மீது எந்த தவறும் இல்லை நான் பெற்ற பையன் ரொம்பவே ஒழுக்கமானவன் என்பதை பாண்டியன் புரிந்து கொண்டார். அந்த சந்தோஷத்தில் மொட்டை மாடியில் பாண்டியன் குடிக்க ஆரம்பித்து விட்டார். குடிக்கும்பொழுதே கோமதி இடம் புலம்பிக்கொள்கிறார்.

நான் பிள்ளைகள் மீது வைத்த நம்பிக்கை பொய்யாகவில்லை, எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக தன் மீது பழியை போட்டு திருட்டுப் பழியை சுமந்து இருக்கிறான். அவனைப் பற்றி புரிந்து கொள்ளாமல் தவறாக பேசிவிட்டேன் என்று வருந்தி கோமதி இடம் பீல் பண்ணுகிறார். உடனே கோமதி, இது மட்டுமல்ல நிஜத்திலும் அவன் எந்த தப்பும் பண்ணவில்லை. ராஜியை கூட அவன் கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணவில்லை.

எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்று மனசுக்குள்ளே புலம்பிக்கொண்டு பாண்டியனிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறார். அந்த நேரத்தில் மொட்டை மாடிக்கு வந்த ராஜி, கதிருக்கு வக்காலத்து வாங்கும் விதமாக கதிர் பற்றி யார் வேண்டுமானாலும் தப்பாக பேசி இருக்கலாம். என் குடும்பத்தில் இருப்பவர்கள் கதிரை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள் என்றால் நீங்கள் கதிரை பற்றி தெரிந்தும் ஏன் எல்லா இடத்திலும் அவனை விட்டுக் கொடுத்து பேசுறீங்க.

ஆனால் நீங்கள் இவ்வளவு தூரம் பேசின பிறகும் கதிர் எந்த இடத்திலும் உங்களை யாரிடமும் விட்டுக் கொடுக்கவில்லை. உங்களை மட்டும் இல்லை இந்த குடும்பத்தையும் அவன் அவ்வளவு உயரமான இடத்தில் வைத்திருக்கிறான் என்று கதிருக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். இதனை தொடர்ந்து குடித்துவிட்டு கீழே வரும் பாண்டியன் ஒன்றாக இருக்கும் பசங்களிடம் இருந்து பேசி கொள்கிறார்.

அப்பொழுது பாண்டியன், கதிரிடம் உனக்கு என்ன வேணுமோ என்னிடம் கேளு நான் செய்கிறேன் என்று சொல்கிறார். உடனே கதிர் இதுதான் சான்ஸ் என்று ராஜி இஷ்டப்படி ஆசைப்பட்டதை செய்வதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். அதனால் ராஜியின் போலீசின் கனவை நிறைவேற்றுவதற்கு மறுப்பு தெரிவிக்காமல் சம்மதம் சொல்ல வேண்டும் என கேட்கிறார்.

இதை கேட்ட பாண்டியன், குடிபோதையில் இருந்தாலும் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறார் என்பதற்கு ஏற்ப அதெல்லாம் முடியாது என்று கதிர் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். ஆக மொத்தத்தில் கிடைக்கிற கேபில் பாண்டியனிடம் ராஜி, கதிர்காக வக்காலத்து வாங்கி பேசுவதும், ராஜிக்காக கதிர் பாண்டியனிடம் பேசும் விதமாக இரண்டு பேரும் பாசத்தை பொழிகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பழனிவேலு தூங்கப் போனதும் சுகன்யா அக்கறையாக பேசுவது போல் பேசி எங்க வீட்டிற்கு போகலாம் இரண்டு நாள் தங்கிட்டு வரலாம் என கூப்பிடுகிறார். அதற்கு பழனிவேலு, கடையில் ஆயிரம் வேலை இருக்கிறது அதை எல்லாம் விட்டுட்டு வர முடியாது என்று சொன்னதும் சுகன்யா கோபப்பட ஆரம்பித்து விட்டார். உடனே சுகன்யா வழக்கம்போல் கத்திய நிலையில் பழனிவேலு இப்போதைக்கு நாம் இரண்டு பேரும் சினிமாவுக்கு போயிட்டு வரலாம் என்று சொல்லி சமரசம் செய்து விடுகிறார்.

அந்த வகையில் ஒவ்வொரு நாளும் பழனிவேலு சுகன்யாவிடம் டார்ச்சர் அனுபவிக்கிறார். ஆனாலும் புதுசா கல்யாணம் பண்ணிட்டு வந்த பெண்களின் சின்ன சின்ன ஆசையையும் நிறைவேற்ற முடியாத அளவிற்கு தான் பாண்டியன் குடும்பம் இருப்பதால் நடுவில் பழனிவேல் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.

Advertisement Amazon Prime Banner