Tamil Cinema News | சினிமா செய்திகள்
காலேஜ் விழாவில் தளபதி 63 படத்தை பற்றி பேசிய கதிர்
கதிர் விஜய் சாரை உங்களைப்போல காலேஜில் படிக்கும் போது அவரைப் பார்த்து ரசித்து உள்ளேன். விஜய் சார் படத்தில் நடிப்பது பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தளபதி 63. இப்படத்தில் விஜய் ஒரு ஸ்போர்ட்ஸ் மேனாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மதயானைக்கூட்டம் கதிர் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சத்ரு டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இளைய தளபதி படத்தைப் பற்றிய தகவலை கூறியுள்ளார்.
காலேஜ் விழாவிற்கு சென்ற கதிர் அங்கு ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் தளபதி 63 படத்தை பற்றி தகவலை கேட்டுள்ளனர். அதற்கு கதிர் விஜய் சாரை உங்களைப்போல காலேஜில் படிக்கும் போது அவரைப் பார்த்து ரசித்து உள்ளேன். விஜய் சார் படத்தில் நடிப்பது பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
