ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

பாண்டியனை உதாசீனப்படுத்தி ராஜிக்காக ரிஸ்க் எடுக்கப் போகும் கதிர்.. மீனா கொடுத்த அட்வைஸ், திருந்திய தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி, அம்மாவை நினைத்து மனசு கஷ்டப்பட்டு இருக்கும் பொழுது வீட்டில் சமைக்க முடியாது என்பதால் சாப்பாடு கடையில் வாங்கிக் கொள்ளலாம் என்று மீனா, பாண்டியனிடம் சொல்கிறார். ஆனால் பாண்டியன் தேவை இல்லாமல் பணம் வேஸ்ட் ஆகும் உடம்பும் கெட்டுப் போய்விடும் என்று வேண்டாம் என சொல்கிறார்.

உடனே மீனா, உங்களுக்கு பணம் தான் பிரச்சனை என்றால் நான் பணம் தருகிறேன் என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்லி விடுகிறார். இதை கேட்டதும் பாண்டியன், யார் பணமாக இருந்தால் என்ன உன்னுடைய பணமும் கஷ்டப்பட்டு தானே சம்பாதிக்கிறாய்? அதனால் ஒன்னும் வேண்டாம் வீட்டிலேயே கோமதி சமைத்துக் கொடுப்பாள் என்று சொல்கிறார்.

அதற்கு மீனா, அத்தை கொஞ்சம் சோர்வாக இருக்கிறார். அவங்களால எப்படி சமைக்க முடியும் என்று கேள்வி கேட்கிறார். பாண்டியன், கோமதியை பார்த்து உன்னால சமைக்க முடியாதா என்று கேட்கிறார். உடனே கோமதி, பாண்டியனுக்கு பயந்து போய் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை நான் சமைத்து தருகிறேன் என்று சொல்லி அடுப்பங்கரைக்கு மீனாவை கூட்டிட்டு போகிறார்.

ஆனால் அதற்குள் தங்கமயில் அனைவருக்கும் தேவையான உணவுகளை சமைத்து விடுகிறார். பிறகு எதுவும் பேசாமல் தங்கமயில் ரூமுக்குள் போய்விடுகிறார். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் தூங்க முடியாமல் கோமதி, அம்மாவை நினைத்து ரொம்பவே பீல் பண்ணுகிறார். பிறகு வெளியே வந்து கொஞ்ச நேரம் இருக்கலாம் என்று வருகிறார்.

ஆனால் அங்கே கதிர் மற்றும் செந்தில் பேசி கொண்டிருக்கிறார்கள். பிறகு கோமதி, அவருடைய அம்மாவின் நினைவுகளை பற்றி பிள்ளைகளிடம் பீல் பண்ணி பேசுகிறார். அடுத்து கோமதி தூங்க போனதும் கதிர் ரூம்குள் போகிறார். அங்கே ராஜி, அப்பத்தாவின் போட்டோவை பார்த்து அழுது கொண்டிருக்கிறார். உடனே கதிர், ராஜ்ஜியை சமாதானப்படுத்தி நான் அப்பத்தாவை பார்த்து பேசுவதற்கு கூட்டிட்டு போகிறேன் என்று சொல்கிறார்.

அந்த வகையில் பாண்டியன் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்த பிறகும் ராஜிக்காக கதிர் மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் விதமாக யாருக்கும் தெரியாமல் அப்பத்தாவை சந்தித்து பேசுவதற்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகப் போகிறார். ஆனால் இந்த விஷயம் சக்திவேல் மற்றும் முத்துவேலுக்கு தெரிந்த பிறகு இதை வைத்து பிரச்சினை பண்ணுவார்கள்.

பிறகு மறுபடியும் பாண்டியன், கதிர் மீது கோபப்பட்டு சண்டை போட போகிறார். இதனை தொடர்ந்து தங்கமயில், எல்லோரும் நம்மீது கோபமாக இருக்கிறார்கள் என்று புரிந்து கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டே போகிறார். ஆனால் மீனா, உங்க மீது மட்டும் தவறு கிடையாது சரவணன் மாமா மீதும் தவறு இருக்கிறது. அதனால் எல்லாத்துக்கும் போய் கெஞ்சிகிட்டு இருக்காதீங்க என்று அட்வைஸ் பண்ணுகிறார்.

அத்துடன் தற்போது தங்கமயில் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது பாண்டியன் குடும்பத்துக்கு ஏற்ற மருமகள் ஆகவும் மாறிவிட்டார் என்பது போல் தெரிகிறது. இப்போது திருந்திய தங்கமயில் மறுபடியும் அம்மா பேச்சைக் கேட்காமல் இருந்தால் பாண்டியன் வீட்டில் மூன்று மருமகளும் ஒற்றுமையாக இருந்து குடும்பத்தை வழி நடத்துவார்கள்.

- Advertisement -spot_img

Trending News