விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பி நான்கு பேரும் பாண்டியன் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற டிபார்ட்மெண்ட் ஸ்டோரை பல தடைகளை மீறி வெற்றிகரமாக திறந்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ரொமான்டிக் ஜோடியான முல்லை-கதிர் இருவரும் ஊட்டிக்கு ஹனிமூன் செல்ல திட்டமிடுகின்றனர். ஏனென்றால் முல்லை, தனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆர்வத்தில், அதே நினைப்பில் இருப்பதால் மன மாற்றத்திற்காக கதிர், நான்கு நாட்கள் முல்லையை ஊட்டிக்கு அழைத்து செல்ல திட்டமிடுகிறார்.
மேலும் முல்லைக்கு கருப்பையில் பிரச்சினை இருப்பதால் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு குறைவு என மருத்துவர் ஏற்கனவே ரிப்போர்ட் வழங்கியுள்ளனர். அந்த ரிப்போர்ட்டை அலமாரியில் வைத்து பூட்டி, அந்த சாவியை கதிர் வைத்திருக்கிறார்.
ஏன் அந்த சாவியை தன்னிடம் கொடுக்கவில்லை என முல்லை குலம்பிக் கொண்டிருக்கிறார். இதனால் அந்த சாவியை தருமாறு அடிக்கடி முல்லை கதிரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
இதனால் அந்த சாவியை கொடுத்தால்தான் முல்லை தூங்குவார் என புரிந்து கொண்ட கதிர், அதை முல்லையிடமே கொடுத்துவிட்டு, பிறகு முல்லை தலையணைக்கு அடியில் மறைத்து வைத்த பின், அதை அவருக்குத் தெரியாமல் எடுத்து விடுகிறார்.
இவ்வாறு முல்லைக்கு பிரச்சினை இருப்பதை முல்லை தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக காதல் மனைவியிடம் இருந்து திருடி நாடகமாடும் கதிரின் பரிதாபநிலை பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது.