தளபதி ஸ்டைலில் அடிச்சு பறக்கவிட்டு மாஸ் காட்டும் கதிர்.. விறுவிறுப்புடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்!

விஜய் டிவியின் டாப் சீரியலில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் கடைசி தம்பியான கண்ணன், மீனாவின் அப்பா கடையில் வேலை பார்த்து வந்தார்.

அங்கு பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு வேலையிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் எந்த தப்பும் செய்யவில்லை என மீனா நிரூபித்தார். அத்துடன் உண்மையாக பணத்தை திருடிய நபர் யார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் பணத்தை திருடிய நபரை வழியில் சந்தித்த கதிர் மற்றும் ஜீவா இருவரும், அந்தப் பையனை கண்டித்த போது எக்குத்தப்பான வார்த்தையை விட்டதால் கதிர் அவனை அடித்தார். இதை மனதில் வைத்துக் கண்டு ரவுடிகளை வைத்து கண்ணனை அந்தப் பையன் அடித்து துவைத்து எடுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கதிர், அந்தப் பையனையும் ரவுடிகளையும்  தளபதி விஜய் ஸ்டைலில் வெளுத்து வாங்கினார். இந்தக் காட்சிகளை பார்த்த சீரியல் ரசிகர்கள் கதிரின் ஆக்சன் காட்சிகளுக்கு விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

மேலும் எப்பொழுதுமே கடையும் வீடுமாக இருக்கும் கதைக்களத்தை அதிரடி காட்சிகள் அரங்கேறியது ரசிகர்களை குஷிப்படுத்தியது. அத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதிரின் கதாபாத்திரம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக காண்பிக்க படுவதால் அவருக்கு மேலும் மேலும் ரசிகர் கூட்டம் பெருகிக்கொண்டே செல்கிறது.

அத்துடன் கதிர்-முல்லை ரோமன்ஸ் காட்சிகளும் இந்த சீரியலின் கூடுதல் பலம் ஆகும். எனவே சின்னத்திரை ரசிகர்களை பொருத்தவரை ஒவ்வொரு சீரியலிலும் ஏதாவது ஒரு நபரை கூடுதலாக ரசிப்பார்கள் அந்த லிஸ்டில் கதிரும் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்