Connect with us
Cinemapettai

Cinemapettai

முஸ்லிம் வாக்குகளால் வெற்றி பெற்ற கதிர் ஆனந்த்!

kathir-anand

Politics | அரசியல்

முஸ்லிம் வாக்குகளால் வெற்றி பெற்ற கதிர் ஆனந்த்!

வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் உள்ள வாக்குகள் 14,32,555.

இதில் தேர்தலில் பதிவான வாக்குகள் 10,24,352. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பெற்ற வாக்குகள் 4,83, 459. வேலூர் தொகுதியில் சுமார் 3 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.

குறிப்பாக, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களே வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறார்கள்.

இந்த முறை கதிர் ஆனந்திற்கு வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி தொகுதிகளில்தான் அதிக வாக்குகள் விழுந்துள்ளன. துரைமுருகனின் சொந்த ஊரான கே.வி.குப்பம் தொகுதியில் கூட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிக வாக்குகளை பெறவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரின் வெற்றிக்கு திமுக சரியாக ஒத்துழைக்கவில்லை, துரைமுருகனின் தொண்டர்கள் சரியாக பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

எனவே, முஸ்லிம்கள் திமுகவிற்கு ஆதரவு தர மாட்டார்கள் என பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஆனால், அதற்கு நேர்மாறாக, முஸ்லிம்களின் ஆதரவுடன், அவர்களது வாக்குகளுடன் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

நாடாளுமன்றத்திலும் முதல்முறையாக காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.

இதற்கிடையில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு முதலியார் வாக்குகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. அதே போல் வன்னியர் சமூக வாக்குகளும் கிடைக்கவில்லை. உதயசூரியன் வெற்றிக்கு காரணமே இஸ்லாமியர்கள் வாக்குகள் என்று வேலூர் பகுதியில் பேச்சு அடிபடுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top