fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கில் பில் பாணியில் ஒரு ரத்தசரித்தரம்- கேட் ஹாலிவுட் பட விமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

கில் பில் பாணியில் ஒரு ரத்தசரித்தரம்- கேட் ஹாலிவுட் பட விமர்சனம்

இந்த கொரானா சூழலில்  OTT தளங்கள் நம் நாட்டிலும் கொடி நாட்டிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு வெளி நாட்டு படங்கள், வெப் சீரிஸ் போன்றவைக்கு இங்கு ரசிகர் வட்டம் அதிகாரத்திக்கொண்டே போகிறது.

நேற்று நெட் பிலிக்ஸ் தளத்தில் வெளியான அமெரிக்க ஆக்ஷன் திரில்லர் படம்  கேட் (KATE ). உமைர் ஆலிம் எழுதிய கதை, படத்தை செட்ரிக் நிகோலஸ் ட்ரொயன் இயக்கியுள்ளார். மேரி எலிசபெத் விண்ஸ்டட் கதையின் நாயகி.

கதை – ஜப்பானில் இருக்கும் நம் நாயகி தனது பாஸ் “வி” சொல்லும் நபர்களை போட்டு தள்ளும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறார். ஒசாகா நகரில் ஒருவரை சுட முயற்சிக்கும் பொழுது அவளின் மகள் இருப்பதனால் யோசிக்கிறார், எனினும் பாஸ் சொல்ல வேலையே முடிக்கிறார்.

இத்துடன் இந்த காண்ட்ராக்ட் கில்லர் தொழில் எனக்கு போதும், நான் விலகுகிறேன் என சொல்ல, 10 மாதம் கழித்து கடைசி வேலை ஒன்று வழங்கப்படுகிறது. கிஜிமா என்பவனை முடிக்க வேண்டும் , அந்த நபர் தப்பிக்கிறான். இவள் உடம்பில் எதோ செய்கிறது . மருத்துவமனையில் இவள் உடலில் பொலோனியம் என்ற அணு கலக்கப்பட்டு விட்டது என்பது தெரிய வருகிறது. உயிர் வாழ ஒரு நாள் மட்டுமே என்ற நிலையில் சில மருந்துகளை எடுத்துக்கொண்டு, தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய கிஜிமாவை தேடி செல்கிறாள்.

kate

படத்தின் ஆரம்பத்தில் சுடப்பட்டவன் கிஜிமாவின் சகோதரன், அவனின் மகள் வைத்தே கிஜிமாவை நெருங்க திட்டம் போடுகிறாள், எனினும் அந்த குழதையின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்பது பின்னரே தெரிகிறது. அந்த பெண்ணின் உதவியுடன் கிஜிமாவை அடைய, ரெஜின் என்பவன் தான் முக்கிய வில்லன் என்பது தெரியவருகிறது, கூடவே வி கெட்டவன் என்பதும் தெரிய வர, தோட்டாக்கள் தெறிக்கிறது.

சினிமாபேட்டை அலசல்– Kill Bill , John Wick போன்ற படங்கள் பாணியில் லாஜிக்கை விட ஆக்ஷன் காட்சிகள் அதிகம் உள்ள படம். கார் சேசிங், துப்பாக்கி சுடுதல் என வேற லெவல் ஆக்ஷன் காட்சிகள். நம் நாயகி ஆக்ஷன் காட்சிகளில் கலக்குகிறார், எனினும் செண்டிமெண்ட் காட்சிகளில் சொதப்பல் தான்.

சிறப்பான எடிட்டிங், சூப்பரான இசை, ஒளிப்பதிவு ப்ளஸ். எனினும் பார்த்து சலித்த பழி வாங்கும் படலம் மற்றும் திரைக்கதை மைனஸ் தான். ஆரம்பத்தில் உடலில் அணு கலக்கப்பட்டது என்பதும் ஏற்படும் ஆர்வம் போக போக குறைகிறது.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு கூட சற்றே சலிப்பை ஏற்படுத்தும்  இப்படம். எனினும் ஆக்ஷன் படத்தை விரும்பும் நபர்கள் வீக் எண்ட் எந்தவேளையும் இல்லையெனில் தாராளமாக  பார்க்கலாம்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2 .75 / 5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top