Tamil Cinema News | சினிமா செய்திகள்
நண்பர்களை அழைத்து மொக்கைப்போடும் ஆர்யா..! என்ன மக்கா இப்படி இறங்கிட்டாரு?
நடிகர் ஆர்யா நடித்த கடம்பன் படம் கடந்த 14ம் தேதி வெளியானது. படத்திற்காக ஆர்யா பல்வேறு ஹோம் ஒர்க்ஸ், பயிற்சி என்று காட்டில் பல இன்னல்களை சந்தித்தார்.
படம் வெளியே வந்த பிறகு படம் வெற்றி பெற்றுவிட்டால் காடுகளில் பட்ட கஷ்டம் எல்லாம் பறந்து விடுமென நம்பினார்.
ஆனால் அவரது நண்பர்கள் ஏற்கனவே படம் குறித்து எச்சரிக்கை தெரிவித்தார்களாம். தற்போது படமும் தோல்வியடைந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன ஆர்யா ரசிகர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், இனி தனக்கு எது சரிப்பட்டு வருமோ.. இனி அந்த மாதிரி கதை கேட்டு படத்தில் மட்டுமே நடிப்பேன் என தனது நண்பர்களை அழைத்து பேசி மொக்கைப்போட்டு வருகிறாராம் ஆர்யா.
இதனால் அவரது நண்பர்கள் ஆளைவிட்டால் போதுமடா சாமி.. என துண்ட காணோம் துணியை காணோம் என இவரை பார்த்து ஓடி ஓளிகிறார்களாம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
