Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் சார் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. இது பாலியல் அத்துமீறல்.. கொதிக்கும் கஸ்தூரி
அஜித் சார் இதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், இது தீவிர ரசிகர்களிடையேயான சண்டை அல்ல. இது பாலியல் அத்துமீறல் என நடிகை கஸ்தூரி கொந்தளித்துள்ளார்.
திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இந்நிலையில் அஜித் ரசிகர் என்ற பெயரில் ஆபாசமான ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் கஸ்தூரி பெயரும் உள்ளது. இதையடுத்து நடிகை கஸ்தூரி கடுமையாக கொந்தளித்துள்ளார்.
அஜித் ரசிகர் என்று சொல்லி அவரது பெயரை கெடுக்க வேண்டாம் என்று கடுமையான வார்த்தைகளால் எச்சரித்த நடிகை கஸ்தூரி, ஆபாச ட்வீட் செய்த அஜித் ரசிகர்களின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டு ட்விட்டர் இந்தியா நிறுவனத்திலும் புகார் கொடுத்துள்ளார்.
அஜித் ரசிகர்கள் பலர் அவருடன் சண்டை போட்டதால் டுவிட்டர் யுத்தமாக மாறியது. இந்நிலையில், அஜித் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது தீவிர ரசிகர்களிடையேயான சண்டை அல்ல, இது பாலியல் அத்துமீறல். நான் மட்டுமல்ல, பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கஸ்தூரி கூறியுள்ளார்.
