fbpx
Connect with us

Cinemapettai

விஜயின் ரசிகனோ எதிரியோ என்னவோ.. மனவருத்தத்துடன் ஸ்டேட்டஸ் தட்டிய கஸ்தூரி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜயின் ரசிகனோ எதிரியோ என்னவோ.. மனவருத்தத்துடன் ஸ்டேட்டஸ் தட்டிய கஸ்தூரி

பெரிய ஹீரோவின் படங்கள் ரிலீசுக்கு முன் பல தடைகளை தகர்த்து  ரிலீஸ் ஆகவேண்டிய சூழலில் தான் இன்று தமிழகம் உள்ளது. விஜய் – நயன்தாரா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே தான் நேற்று பிகில் உலகெங்கும் ரிலீஸானது. ரசிகர் மன்றம் வாயிலாக பிளெக்ஸ், கட் – அவுட் தவிர்த்து, ஆதரவற்றவருக்கு உதவிகள் என பல விஷயத்தை விஜய் ரசிகர்கள் செய்தாலும்; சில தேவையற்ற நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது.

நேற்று காலை பிகில் சிறப்பு காட்சியை திரையிட முடியமால் போக கிருஷ்ணகிரி விஜய் ரசிகர்கள் அங்கு வன்முறையில் ஈடுபட்டனர். தியேட்டர் அருகில் உள்ள கடைகள், பேனர்கள், மற்றும் போலீஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்கியதன் காரணமாக 30 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் இது பற்றி நடிகை கஸ்தூரி மனவருத்தத்துடன் டீவீட்டுக்கள் போட்டு வந்தார்.

பிகில் திரைப்படம் எத்தனை சாதனைகளை செய்தாலும், இந்த வன்முறை நிகழ்ச்சி தான் இந்த படத்தை பற்றி ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும். நாம் பல காரணங்கள் சொல்லலாம், வேறு சிலரின் சதி என கூட கூறலாம், ஆனால் நம் மனதுக்கு உண்மை என்னவென்பது தெரியும். உண்மையான விஜய் ரசிகர்கள் தங்கள் ஹீரோவிற்கு இது போன்ற சூழலை உருவாக்கமாட்டார்கள்.

அவ்வளவு நபர்கள் பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள், ஆர்பரிக்கிறார்கள். சிலர் வீடியோ எடுக்கிறார்கள். ஆனால் யாரும் சென்று தடுக்கவில்லை.

பெண்கள், குழந்தைகள், வயதானவர் என ஒருவர் கூட இல்லை. அனைவரும் இளைஞர்கள் தான். இவர்கள்தான் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளிக்களா ? அய்யோ…

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top