Tamil Cinema News | சினிமா செய்திகள்
வனிதாவுக்கு அந்த நோய் இருக்குதாமே? அடக்கடவுளே! இதுக்குத்தான் இவ்வளவு சீனா?
வனிதா மூன்றாவது திருமண பஞ்சாயத்து இன்னும் ஓய்ந்தபாடில்லை. நாளுக்கு நாள் இருவரைப் பற்றியும் பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
பீட்டர் பால் என்பவரை வனிதா மூன்றாவது முறையாக முறையான வழியில் திருமணம் செய்யாததே இந்த பிரச்சனைக்கு காரணம். இதனை பீட்டர் பால் மனைவி எலிசபெத் கடுமையாக கண்டித்திருந்தார்.
அவருக்கு ஆதரவாக வந்த கஸ்தூரி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கண்டபடி பேசி வம்புக்கு இழுத்தார் வனிதா. இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து கஸ்தூரி ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்க வனிதா மற்றும் பீட்டர் பால் ஆகியோரின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிய கஸ்தூரியிடம் ரசிகர் ஒருவர் வனிதாவின் யூடியூப் சேனல்களைப் பார்த்து சமையல் கற்றுக் கொடுக்கிறீர்களா? அவர் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கிறீர்களா என கேட்டுள்ளார்.
ஆனால் கஸ்தூரி, அவர் சேனலை பார்ப்பதைவிட கமெண்ட்டுகளை படிப்பதற்கே நான் அதிகம் வருவேன் என கிண்டல் அடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வனிதாவுக்கு பொய் சொல்லும் வியாதி இருக்கிறது எனவும் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

kasturi-tweet
இதுக்கு அப்புறம் என்ன என்ன பிரச்சனை வரப் போகிறதோ என கோலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியில் உள்ளனர்.
